என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "coavi"
- வனத்தையொட்டிய விளைநிலங்களில் எந்தவித விவசாயமும் கடந்த 6 ஆண்டுகளாக நடக்கவில்லை.
- சோலார் மின் வேலி அமைத்து விலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனித -வனவிலங்குகள் மோதல், பயிர் சேதம் தொடர்பான விவசாயிகள், வனத்துறை, மாவட்ட நிர்வாக சார்பில் முத்தரப்பு கூட்டம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பழனிசாமி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால்' விவசாயிகளின் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பயிர் செய்யும் பரப்பளவு எண்ணிக்கை 50 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது. குறிப்பாக வனத்தையொட்டிய விளைநிலங்களில் எந்தவித விவசாயமும் கடந்த 6 ஆண்டுகளாக நடக்கவில்லை.
சேதப்படுத்தப்பட்ட விவசாய பயிர்களை வனத்துறையினரே ஆய்வு செய்து விவசாயிகளை அலை கழிக்காமல் உடனுக்குடன் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட சேதமடைந்த அகழிகளை தூர்வாரி அதனை ஒட்டி சோலார் மின் வேலி அமைத்து விலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை "களிறு" விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டு வந்தது. இக்கூட்டத்தின் மூலம் அரசுதிட்டங்களை விவசாயிகளுக்கு தெரிவி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு குழு ஒன்றை அரசு சார்பில் உருவாக்க வேண்டும்.
வனவிலங்கு பிரச்சனை சம்பந்தமாக குறைகளை தீர்த்திட வனத்துறை சார்பில் மாதம் ஒரு முறை குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தும் திட்டம் நடைமுறையில் இல்லாததால் வனவிலங்கு களை கண்காணிக்க நவீன முறையில் புதிய திட்ட த்தை உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். வனப்பகுதிகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் வன அலுவலர்கள் வாகனங்கள் ரோந்து செல்வதற்கும் வன விலங்குகளை கண்காணிப்பதற்கும் பாதை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.
வனவிலங்குகளுக்கு கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பகுதி வாரியாக நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வனபாதுகாப்பு சட்டத்தில் அதிகப்படியாக வனவிலங்குகளுக்கு கொடு க்கப்படும் முக்கியத்துவத்தை பரிசீலித்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
பயிர்களையும் உயிர்களையும் பாதுகாத்திட விவசாய நிலங்களில் சுற்றி அமைக்கப்படும் சோலார் மின் வேலிகளுக்கு 90 சதவீதம் மானியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதில் விவசாயிகள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்