என் மலர்
நீங்கள் தேடியது "Cockroach"
- 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகரை சேர்ந்த சமூக சேவகர் ஐ.ஜி.வீரராகு. இவரது மனைவி பிரபாதேவி (36). இவர், பா.ஜனதா பிரமுகரான இவர் சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் முத்தியால்பேட்டை தொகுதியில் தேர்தல் பணியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இவரும் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40), பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த கோமதி (44) ஆகியோரும் புதுவை 100-அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.
அப்போது சிக்கன் பிரியாணியில் இறந்துபோன கரப்பான் பூச்சி கிடந்தது. இதனால் 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதுபற்றி அவர்கள். ஓட்டல் மேனேஜர் மற்றும் அதன் இயக்குனருக்கு புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து உடனடியாக பிரபாதேவியின் சகோதரர் பிரகாஷ் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு மூலகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரபாதேவி பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் பாதுகாப்பாற்ற முறையில் தயார் செய்து, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே, தரமற்ற பிரியாணியை வழங்கி வாந்தி பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்திய சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
- தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தக பாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறி ஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக் குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிஸின்கள் IRCTC யை கிழித்தெடுத்து வருகின்றனர்.
- இதுபோல் மற்றோரு சம்பவம் காசி எக்ஸ்பிரஸிலும் நடந்துள்ளது.
குலாப்ஜாமுனில் உயிருடன் ஊர்ந்த கரப்பானப்பூச்சி.. பயணி வெளியிட IRCTC உணவு வீடியோ
இந்திய ரயில்வேயில் IRCTC சார்பில் காண்ட்ராக்ட் மூலம் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. பயணி விரும்பினால் பயணத்தின்போது ஆர்டர் செய்து இருக்கைக்கே உணவை வரவழைக்கும் வசதி உள்ளது. ஆனால் உணவின் தரம் குறித்து பாசிட்டிவான ரிவியூவ்கள் வருவகிறதா என்பது கேள்விக் குறித்தான்.
அந்த வகையில், கோராக்பூரில் இருந்து மும்பை லோகமான்யா திலக் டெர்மினல் செல்லும் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட IRCTC உணவுவில் வழங்கப்பட்ட இனிப்பு வகையான குலாப்ஜாமூனில் உயிருடன் கரப்பான் பூச்சி ஒன்று ஊர்ந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Cockroach in food byu/Aggravating-Wrap-266 inindianrailways
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிஸின்கள் IRCTC யை கிழித்தெடுத்து வருகின்றனர். இதுபோல் மற்றோரு சம்பவம் காசி எக்ஸ்பிரஸிலும் நடந்துள்ளது. உணவில் கிடந்த பூச்சியின் படத்தை பயணி ஒருவர் பகிரவே அது இணையத்தில் தீயாக பரவியது. இந்த சமபாவங்கள் தொடர்பாக IRCTC நிறுவனம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

- பேண்ட்ரி காரில் குப்பைத் தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்படுவதாக புகார்.
- இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக்கி ஜெஸ்வானி. இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது குடும்பத்துடன் ஷீரடிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வந்தே பாரத் ரெயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி மிதந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரிக்கியின் சகோதரி முழுமையாக சாப்பிட்ட பிறகே பூச்சி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, ரெயிலில் உள்ள 'பேண்ட்ரி காரில் புகார் செய்யச் சென்றபோது, குப்பைத் தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்பட்டு, கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரிக்கி ஜெஸ்வானி கூறுகையில், "எனது சகோதரி சைவ உணவு உண்பவர். அவர் சாப்பிட்ட பருப்பு குழம்பின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சியைக் கண்டபோது அவள் கிட்டத்தட்ட உணவை முடித்துவிட்டாள்.
அதற்குள் எனது 80 வயது தந்தை உட்பட எனது குடும்பத்தினர் அனைவரும் பருப்பு சாம்பாரை சாப்பிட்டுவிட்டனர். நாங்கள் புகார் செய்ய பேண்ட்ரி காருக்கு சென்றபோது, குப்பைத் தொட்டிக்கு அருகிலேயே உணவு தயாரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டோம். அங்கு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன.
ஏசி சேர் கார் சி5 கோச்சில் பரிமாறப்பட்ட தயிர் கூட கூடுதல் புளிப்புடன் கெட்டுப்போனதாக இருந்தது" என்றார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.
- அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த வாலிபரின் வயிற்றிலிருந்து உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த 23 இளைஞர் ஒருவர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.
3 நாட்கள் வலியால் அவதிப்பட்ட அவர் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை எண்டோஸ்கோப்பி பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் அவரது வயிற்றில் கரப்பான்பூச்சி ஒன்று உயிருடன் இருப்பதை அறிந்தனர்.
உடனே எண்டோஸ்கோப்பி முறையில் 10 நிமிடத்தில் அவரது வயிற்றில் இருந்த கரப்பான்பூச்சியை வெற்றிகரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.
இளைஞர் சாப்பிடும்போது கரப்பான் பூச்சியை விழுங்கி இருக்கலாம் என்றும் தக்க சமயத்தில் சிகிச்சை அளித்ததால்தான் சிக்கலின்றி அவரை காப்பாற்ற முடிந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்சில் வருகிற 13-ந் தேதி பொது தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிபர் ரோட்ரிகோ துதர்தே நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், போஹால் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார கூட்டத்தில் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் எதிர்க்கட்சிகள் குறித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது, கரப்பான் பூச்சி ஒன்று அவரது வலது தோள்பட்டையின் மீது வந்து அமர்ந்தது.
இதனை பார்த்ததும், அதிபரின் பெண் உதவியாளர், தன் கையில் வைத்திருந்த காகிதத்தால் கரப்பான் பூச்சியை விரட்ட முயன்றார். ஆனால் அது, அதிபரின் தோள்பட்டையில் மேலும், கீழுமாக ஓடி ஆட்டம் காட்டியது.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரோட்ரிகோ துதர்தே, தனது கையால் கரப்பான் பூச்சியை தட்டிவிட்டுவிட்டு, ‘இது எதிர்கட்சியின் சதி’ என நகைச்சுவையாக கூறி, பேச்சை தொடர்ந்தார். இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.