என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coconut pulse"
- 125 விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 921கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.45லட்சத்து ஆயிரத்து 600க்கு வணிகம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை 125 விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 921கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 77.90 க்கும், குறைந்தபட்சம் ரூ.58 க்கும் கொள்முதல் செய்தனர்.
நேற்று மொத்தம் ரூ.45லட்சத்து ஆயிரத்து 600க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- செவ்வாய்கிழமை 137விவசாயிகள் கலந்து கொண்டு 71ஆயிரத்து 142கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.30க்கும், குறைந்தபட்சம் ரூ.66.90 க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 137விவசாயிகள் கலந்து கொண்டு 71ஆயிரத்து 142கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 14வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.30க்கும், குறைந்தபட்சம் ரூ.66.90 க்கும் கொள்முதல் செய்தனர்.நேற்று மொத்தம் ரூ.56லட்சத்து 2ஆயிரத்து 376க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு சந்தைகளுக்கும், கொப்பரையாகவும் பருப்பாக மாற்றப்பட்டு வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் எண்ணெய் உற்பத்திக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவான உற்பத்தியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள் மூலம் எண்ணெய் பிழியப் பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள் பலவற்றுக்கும் டேங்கர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.49 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளக்கோவில், லாலாபோட்டை, வாணியம்பாடி, முத்தம்பட்டி, திருச்சி, கரூர், வாகரை, தேவத்தூர் பகுதி விவசாயிகள் 140 பேர், 64 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1264 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 19 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு கடந்த மாதத்தை காட்டிலும் ரூ.6 அதிகரித்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ரூ.4 அதிகரித்து ஒரு கிலோ ரூ.60.80 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.49 லட்சது 11 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
தற்போது முகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில் தேங்காய் விலையும் தேங்காய் பருப்பு விலையும் கடகடவென சரிந்து வந்த நிலையில், இந்த வாரம் சற்றே விவசாயிகள் நிம்மதி அடையும் வகையில் விலை உயர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் விலைகளும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- செவ்வாயன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.
- 140விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 846கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வா யன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 140விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 846கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 19 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 86.40க்கும், குறைந்தபட்சம் ரூ.60.80க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்த ரூ.49லட்சத்து 11ஆயிரத்து 593க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- 55ஆயிரத்து 470கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 75.35க்கும், குறைந்தபட்சம் ரூ.53.65க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று செவ்வாய்கிழமை 103 விவசாயிகள் கலந்து கொண்டு 55ஆயிரத்து 470கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த மொத்தம் 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 75.35க்கும், குறைந்தபட்சம் ரூ.53.65க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்த ரூ.36 லட்சத்து 85ஆயிரத்து 677க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,766 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- மொத்தமாக 85,805 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 61 லட்சத்து 84 ஆயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,766 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 96 காசுக்கும், அதிகபட்ச விலையாக 79 ரூபாய் 8 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 10 காசுக்கும், இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 53 ரூபாய் 59 காசுக்கும், அதிகபட்ச விலையாக 71 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 67 ரூபாய் 90 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 85,805 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 61 லட்சத்து 84 ஆயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1262 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- மொத்தமாக 61,018 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 45 இலட்சத்து 8 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1262 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 72 ரூபாய் 7 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 7 காசுக்கும், சராசரி விலையாக 79 ரூபாய் 97 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 54 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 67 ரூபாய் 90 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 61,018 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 45 இலட்சத்து 8 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
- அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு 152 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- மொத்தமாக 6,859 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 894-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மொடக்குறிச்சி:
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 152 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 22 காசுக்கும், சராசரி விலையாக 78 ரூபாய் 21 காசுக்கும்,
இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 58 ரூபாய் 89 காசுக்கும், அதிகபட்ச விலையாக 76 ரூபாய் 77 காசுக்கும், சராசரி விலையாக 73 ரூபாய் 27 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 6,859 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 894-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மொடக்குறிச்சி:
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 260 மூட்டைகள் தேங்காய்பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 65 காசுக்கும், அதிகபட்ச விலையாக 85 ரூபாய் 16 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.
இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 66 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 29 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 9 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 12,741 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்