என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coimbatore Railway Station"
- ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
கோவை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான அமைப்புகள் ரெயில் மறியல் போராட்டத்தை அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
ஆனால் நேற்றுமுன்தினம் மாணவர் அமைப்புகள் போராட்டத்தின் போது போலீசாருக்கு தெரியாமல் ரெயில் நிலையம் பின்புறமாக உள்ளே புகுந்து ரெயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். நேற்றும் ரெயில் மறியலுக்கு திரண்டவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
இதையொட்டி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி குறித்து ரெயில் நிலையம் முன்பு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழையாதவாறு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியன் ரெயில்வே தென்னக ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட 8 ரெயில் நிலையங்களில் பிரமாண்ட தேசியக்கொடி அமைக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட கோவை ரெயில் நிலையத்தின் முன்புறம் 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பத்தில் ஏற்றுவதற்காக 30 அடி நீளம், 20 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையில் பிரேத்யேகமாக பிரமாண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
இந்த பிரமாண்ட தேசியக்கொடியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரமாண்டமாக கோவை ரெயில் நிலையத்தில் பறக்கும் தேசியக்கொடியை ஏராளமான ரெயில் பயணிகள் கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தேசியக்கொடி முன்பு நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து சென்றனர்.
கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவர் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சிவக்குமார் இன்று அதிகாலை 3 மணியளவில் காந்திபுரம் கிராஸ்கட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக ஊட்டியில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றார்.
இதில் ஆத்திரமடைந்த அரசு பஸ் டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்து சிவக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ், டிரைவர் கண்டக்டர், லாரி டிரைவர் ஆகியோர் உள்பட 6 பேர் சேர்ந்து சிவக்குமாரை தாக்கினர். இதில் காயம் அடைந்த சிவக்குமார் தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே சிவக்குமாரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கால்டாக்சி இயக்கும் டிரைவர்கள் 40-க்கும் மேற்பட்ட டாக்சிகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். எனவே பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேடைக்கு (பிளாட்பாரம்) மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக செல்லும் வகையில் தானியங்கி படிக்கட்டு, மின்தூக்கி வசதி இருக்கிறது.
அதுபோன்று ரெயில் நிலையம் அருகே பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம் (மல்டிலெவல் பார்க்கிங்) கட்டும் பணியும் நடந்து வருகிறது. மேலும் இந்த ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் கார்களை நிறுத்தும் வசதி இருந்தது. அங்கு திடீரென்று வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள நுழைவு வாசலில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி இருக்கிறது.
ஆனால் அந்த வசதி வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தெரிவது இல்லை. அத்துடன் அது குறித்த அறிவிப்பு பலகையும் ரெயில் நிலைய முன்பகுதியில் வைக்கப்பட வில்லை. இதனால் இங்கு கார்களில் வருபவர்கள் தங்கள் கார்களை நிறுத்த இடத்தை தேடும் நிலை உள்ளது.
ஆனால் சிலர் ரெயில் நிலைய முன்பகுதியில் ரோட்டின் ஓரத்தில் கார்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து பயணிகள் நலச்சங்க தலைவர் ஜமீல்அகமது கூறியதாவது:-
கோவை ரெயில் நிலையம் மூலம் ரெயில்வே நிர்வாகத்துக்கு ஏராளமான வருமானம் கிடைக்கிறது. ஆனால் அங்கு பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதி மிகவும் குறைவு. குறிப்பாக ரெயில் நிலைய முன்பகுதியில் 50 கார்களை நிறுத்த இடவசதி இருந்தது. ஆனால் ரெயில் நிலைய முன்பகுதியை அழகுபடுத்துகிறோம் என்று கூறி ரெயில்வே நிர்வாகம், 24 கார்களை மட்டுமே நிறுத்தக்கூடிய வசதியை செய்து கொடுத்தது.
ஆனால் இந்த வசதி அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதுபோன்று ரெயில் நிலைய பின்பகுதியில் உள்ள குட்செட் ரோடு வழியாக சென்றால் 2-வது நுழைவு வாயில் இருக்கிறது. இந்த பகுதியில் 35 கார்களை நிறுத்தும் வசதி இருக்கிறது. இந்த வசதி குறித்து உள்ளூர் பயணிகளுக்கு தெரியும். ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தெரியவாய்ப்பு இல்லை.
இதனால் அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் தெரியாமல் தேடி அலையும் நிலை உள்ளது. இந்த வசதி குறித்து ரெயில் நிலைய முன்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பயணிகளுக்கும் தெரியும். அவர்கள் அங்கு சென்று கார்களை நிறுத்துவார்கள். அத்துடன் ரெயில்வே போலீஸ் நிலையம் அருகே இருசக்கர வாகன காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தை வேறு இடத்துக்கு மாற்றினால் அங்கு 30 கார்களை நிறுத்தலாம்.
இது குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை அவர்கள் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. அதுபோன்று ரெயில் நிலையம் அருகே ரெயில்வே ஊழியர் ஓய்வு விடுதி உள்ளது. இங்கும் இருசக்கர வாகன காப்பகம் அமைத்தால் 3 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். ஆனால் அதையும் ரெயில்வே நிர்வாகம் செய்யவில்லை. எனவே முன்பகுதியில் அமைக் கப்பட்டு உள்ள கார்களை நிறுத்தும் வசதியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை:
மதுரை தெப்பக்குளம் முனிசாலையை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் சபரீஸ்வரி (வயது 18). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று காலை கோவை ரெயில் நிலையத்தில் மாணவி சபரீஸ்வரி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தார். இதனை அறிந்த ரெயில்வே போலீசார் மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 2 தோழிகளுடன் ரெயிலில் வந்தேன். கோவை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது இயற்கை உபாதைக்காக ரெயிலை விட்டு இறங்கினேன். அதற்குள் ரெயில் புறப்பட்டுச்சென்று விட்டது என்று கூறினார். கழிப்பறை ரெயில் பெட்டிக்குள்ளேயே இருக்கும்போது ஏன் மாணவி கீழே இறங்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து ரெயில்வே இன்ஸ்பெக்டர் லான்ஸ், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவியை அங்குள்ள காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். மாணவி குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்