search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Krishnanuni"

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டி ற்கான ஆண்டுத்தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த ஆய்வில் 2019-2023-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, வழக்கு பதிவேடு, நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள், முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நில அளவைத்துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து, குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நில அளவை பிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

    மேலும், ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நில சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி, அலுவலக மேலாளர் (பொது) பூபதி, தாசில்தார்கள் கார்த்தி, ரவிசங்கர் (கலால்) (பொ), வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்துப்பாயைம்;, இச்சிப்பாயைம், வள்ளிபுரம், அஞ்சூர் மற்றும் கொந்தளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் கொளத்துப் பாயைம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.03 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும், அதே ஊராட்சி பகுதியில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.0.82 லட்சம் மதிப்பீட்டில் கொளத்துப் பாளைம் நூலகம் சீரமைப்பு பணியினை பார்வையிட்டு புத்தகம் வைத்திருக்கும் இடத்தினை தூய்மையாக வைத்திருக்கவும், போதுமான புத்தகங்கள் இருப்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    மேலும் சமூக மாற்றம் என்பது மாணவர்களாகிய உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும், மாணவர்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். சுகாதாரம் என்பது நம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளார்களிடம் வழங்க முன்வரவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கருத்திப்பாளையம் முதல் தாமரைப்பாளையம் வரை ரூ.36.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலையினை பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அஞ்சூர் ஊராட்சி, காரவலசு, அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தினை ஆய்வு செய்து, காலியாக உள்ள இடத்தில் சிறு தோட்டம் அமைக்க ஆசிரியர்களுக்கு உத்தர–விட்டார்.

    மேலும் அதே பகுதியில் சொரியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனது விளைநிலத்தில் இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து குர்குமின் வேதிப்பொருள் தன்மை மாறாமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்து வருவதை பார்வையிட்டார்.

    தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் இச்சிப்பாளையம் நியாய விலைக்கடையினை ஆய்வு செய்து பதிவேடுகள், எடை இயந்திரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 3 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் என ரூ.89.67 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பணிகளை உரிய காலத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக கொந்தளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 0.82.0 எக்டர் பரப்பளவில் விவசாயி முருகேசன் அமைத்துள்ள நுண்ணீர் பாசன கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விவசாயிடம் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முன் நீர்ப்பாசனம் மற்றும் சாகுபடி விவரங்கள், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பின் நீர்ப்பாசனம் குறித்து கேட்டறிந்தார். இது 100 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட ரூ.1,21,091 மதிப்பீட்டில் அமைக்க–ப்பட்டது எனவும் வேலையாட்கள் மற்றும் நேரம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து வள்ளிபுரம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 0.25 எக்டர் பரப்பளவில் விவசாயி கவின்குமார் என்பவர் தனது நிலத்தில் நிரந்திர காய்கறிப் பந்தல் அமைக்க ப்பட்டுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    0.25 எக்டர் பரப்பளவில் கல்தூண்கள் நட்டு கம்பிகள் இழுத்து கட்டி பந்தல் அமைக்க ரூ.1,91,300 செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.50,000 மானியம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் தனது வயலில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளார். 0.25 எக்டர் சாகுபடி செய்ததற்கு சாகுபடி செலவு சுமார் ரூ.30,000 செலவாகும் என்றும் நிகர லாபமாக ரூ.60,000 கிடைக்கும் எனவும் கலெக்டரிடம் தெரிவித்தார்.

    மேலும் அங்கக வேளாண்மை முறையில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டத்தின கீழ் 50 சதவீத மானியத்தின் கீழ் ரூ.2000 மானியத்தில் மருந்தடிக்கும் கருவியினை 1 விவசாயிக்கும், ரூ.722.50 மானியத்தில் தார்ப்பாயினை 1 விவசாயிக்கும் வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் மாசிலாமணி, வேளாண் உதவி இயக்குநர் பி.யசோதா, உதவி இயக்குநர் (தோட்டக்க லைத்துறை) தியாகராஜன், கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பத்மனாபன் (கி.ஊ), மண்டல துணை தாசில்தார் பரமசிவம், வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி உள்பட அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×