என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Collector Krishnanunni"
- பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதையும்,
அஞ்சூர் ஊராட்சி, அஞ்சூரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும்,
கொந்தளம் ஊராட்சி தட்டம்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.46 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று சுவர் அமைக்கப்ப–ட்டுள்ளதையும்,
கொந்தளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் நர்சரி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நர்சரிக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கம்பி வலை மற்றும் பசுமைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளதையும்,
கொந்தளம் ஊராட்சி கள்ளிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,
அதேபகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இருப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும்,
கொளத்துப்பாளையம் ஊராட்சி கொம்பனைப்புதூரில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும்,
அதே பகுதியில் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் கொளத்துப்பாளையம் சந்தை வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை மற்றும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கொந்தளம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 1 விவசாயிக்கு சுமார் 2 எக்டர் பரப்பளவில் பரப்பு விரிவாக்கும் மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், கல்பனா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
- மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து குறைகளை கேட்டு அறிந்தார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ரூ4.54 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் குருவரெட்டியூர் ஊராட்சியில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கோணார்பாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் குருவரெட்டியூரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.
குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் குளோரி நேட்டர் பொருத்தப்பட்டு உள்ளதையும், ஒலகடம் பேரூராட்சி நாகிரெட்டிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.குகானந்தன், பஷீர் அகமது, குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.அசோக்குமார் மற்றும் துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 74 -வது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை புரிந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கமாக குடியரசு தின விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, பஸ் நிலைய,ம் ஸ்வஸ்திகார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில் நிலையம் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகள் உடமை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
- ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.
ஈரோடு:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந் தேதி (வியாழக்ழமை) முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அலுவலர்களுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.
முதல்-அமைச்சர் வரும் 15-ந் தேதி காலை உணவுத் திட்டத்தினைதொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் அமைந்துள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2649 மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படி ஈரோடு மாநகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தில் காலை உணவு சமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.
இத்திட்டம் வரும் 16-ந் தேதி முதல் ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட 26 தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார். மேலும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறி வுரை வழங்கினார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்மு கஉதவியாளர் (சத்துணவு) மணிவண்ணன், ஈரோடு மா வட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உள்பட பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்