என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Rahulnath"

    • விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவீன வசதிகளுடன் விளையாட்டு திடல் அமைய உள்ளது.
    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை அருகே அரசுக்கு சொந்தமான 46 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த இடத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவீன வசதிகளுடன் விளையாட்டு திடல் அமைய உள்ளது. இந்த இடத்தை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.

    விளையாட்டு திடல் இடத்தின் வரைபடம், கட்டுமான டிசைன், மண்ணின் தரம், நீர் வழித்தடம், மின் வழித்தடம், சுகாதாரம், அணுமின் நிலைய கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் மேற்கொண்டார்.

    அப்போது தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப செயலாளர் குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தனர்.

    • சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
    • சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாமல்லபுரத்தில் சுற்றுலா சார்ந்த தொழில்களான தங்குமிடம், உணவு, பயணம், சாகச பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, உள்ளிட்ட தொழில்களை தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் செய்து வருகிறது.

    இவை முறையாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் அனுமதி பெறாமல், உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பதிவு பெற்று அந்த அனுமதியுடன், செயல்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது. தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

    அதன்படி முறையாக சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் வரும் ஜூலை.31-ந் தேதிக்குள் சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×