search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collectors hoist the flag"

    • இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • இதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மாகாந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

     சேலம்:

    இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இைதயொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மாகாந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நலத்திட்ட உதவிகள்

    மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பங்கேற்று அணி வகுப்பு மரியாதையை ஏற்று 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும அவர் பல்வேறு அரசு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். தொடர்ந்து 1800 மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும் அவர் சமாதான புறாவையும் பறக்க விடுவதுடன் பல்வே று துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்க உள்ளார்.

    இதற்காக முதற்கட்டமாக மைதானம் முழுவதும் சமன்படுத்தப்பட்டுள்ளது.பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களுக்கான இடத்தில் சாமியானா பந்தல்ேபாடப்பட்டுள்ளது. ேமலும் விழாவில் கலந்து கொள்பவர்களுக்காக குடிநீர், கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஒத்திகை நிகழ்ச்சி

    கொடியேற்றும் கம்பமும் சீரமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான நேற்று சுதந்திரதினவிழா ஒத்திகை நடந்தது. அதன்படி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்ற படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலனும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடந்தது. இதில் 8 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடி ஒத்திகையில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி காந்தி மைதானம் முழுவதும் போலீ ஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை நாமக்கல் நல்லி பாளையம் அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா கொடியேற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் அவர் நல உதவிகளையும் வழங்குகிறார். இதையொட்டி அந்த மைதானம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுதந்திர தினவிழாவையொட்டி மக்கள் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    குறிப்பாக சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பதுகாப்பு போடப்பட்டுள்ளன. இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வாழப்படி, ஓமலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவில், மலைக்கோட்டை உள்பட முக்கிய இடங்களிலும் புறநகரில் திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளி பாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம் மற்றும் நாமக்கல் வழியாக வடமாநிலங்களில் இருந்து செல்லும் ரெயில்களில் மோப்ப நாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் மூலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும்டி ரெயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக வரும் நபர்களையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×