என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collision with"

    • அடையாளம் தெரியாத வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (42). இவர் பால் சொசைட்டி நடத்தி வருகிறார்.

    இவர் பால் எடுத்து வருவதற்காக நால் ரோட்டில் இருந்து செல்லப்பம்பாளையத்திற்கு கோவை ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வந்த வாகனம் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு சுகுணா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கந்தசாமி மொபட்டில் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
    • அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார்

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மகனை அழைத்து வருவதற்காக மொபட்டில் புதுக்கரை புதூரில் இருந்து பொலவக்காளி பாளையம் பகுதியில் சென்றார்.

    அப்போது ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்குட்பட்ட காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    நள்ளிரவில் நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணை அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×