search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Common Tap"

    • பொதுவான குழாயில் இருந்து தண்ணீர் நிரப்புவதில் தகராறு.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    தேசிய தலைநகர் டெல்லி நகரில் கடுமையான வெப்பம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் குடிநீர் பெறுவதற்கு படாத பாடுபட்டு வருகின்றனர்.

    தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  

    இந்த சூழலுக்கு மத்தியில், துவாரகாவில் பொதுவான குழாயில் இருந்து தண்ணீர் நிரப்புவதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

    டெல்லி செக்டார் 23, துவாரகாவில் நடந்த சண்டை தொடர்பாக இரண்டு காவல் துறைக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், " விசாரணையில் தகராறு காரணமாக மூன்று பேர் காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதி.

    இரு தரப்பினரின் வாக்குமூலத்தின் பேரில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன," என்றார்.

    ×