என் மலர்
நீங்கள் தேடியது "communal violence"
- உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.
- தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்குக் சொல்லுங்க பார்ப்போம்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இன்று உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தின் போது குற்றம் முதல் சட்டம் வகுப்புவாத வன்முறைகள் அதிகரிப்பு குறித்து ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை இடிப்பது தொடர்பாக இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக நாக்பூரில் கலவரம் ஏற்பட்டது.
இதை முன்வைத்து அவையில் பேசிய சஞ்சய் சிங், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் 94 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், உங்கள் ஆட்கள் (பாஜகவினர்) நாடு முழுவதும் ஆத்திரமூட்டும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார்கள்.
உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.
எந்த வரலாற்றை நீங்கள் கற்பிக்க விரும்புகிறீர்கள், தலித்துகள் முன்னாடி பானை கட்டிக்கிட்டு நடக்கணும், தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்கு சொல்லுங்க. எந்த முஸ்லிம், விலங்குகள் குளத்தில் தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் குடிக்க கூடாது என்று சொன்னான் என்று எனக்கு சொல்லுங்க பார்ப்போம்.

நீங்கள் வங்கதேசம்-வங்கதேசம் என்ற பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுகிறீர்கள். நாட்டில் நரேந்திர மோடியின் அரசு 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது, அமித் ஷா உள்துறை அமைச்சர் ஆக இருக்கிறார். இரு நாட்டின் எல்லை மேற்கு வங்காளத்துடனும் அசாமுடனும் உள்ளது. அப்படியிருக்க ஊடுருவல்காரர் எல்லையைக் கடந்து டெல்லிக்கு எப்படி வருகிறார்?.
பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் வசிக்கும் டெல்லி குற்றங்களின் கோட்டையாக மாறிவிட்டது. இங்குள்ள காவல்துறை நேரடியாக உள்துறை அமைச்சரின் கீழ் வருகிறது.
பெண்கள், குழந்தைகள் மற்றும் எஸ்சி-எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் இரட்டை எஞ்சின் அரசு செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.
- நாளை வரை நூ மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன
- கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ளது நூ (Nuh) மாவட்டம்.
இங்கு கடந்த ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் வேறொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு மோதல் உருவானது. இதில் வன்முறை வெடித்து இம்மோதல் பெரும் கலவரமாக மாறியது.
கலவரம் மேலும் பரவாமல் தடுக்கவும், அமைதி திரும்பவும் மாநில அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பணியாற்றி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கலவரம் குறித்து இரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் மீது பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். நாளை () வரை அந்த மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
கலவரம் குறித்து பல பிரமுகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரயராக பணிபுரிபவர் முகேஷ் குமார். இவர் இக்கலவரம் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
முகேஷ் குமார் எக்ஸில் (டுவிட்டர்) ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
"கத்தார் நாட்டை தலைமை இடமாக கொண்ட அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம், குருகிராம் காவல்துறை ஆணையர் கலா ராமச்சந்திரன்-ஐ தொடர்பு கொண்டு இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நிர்பந்திக்கிறது. இந்த அழுத்தத்தால் ஆணையர் இந்து மத ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் எங்கிருந்தாலும் அவர்களை கைது செய்கிறார்." இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதை குருகிராம் காவல்துறை மறுத்தது. இதனை தொடர்ந்து முகேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கைக்கு சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.., "இந்த கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நாங்கள் அவருக்கு துணையாய் இருப்போம்" என தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹன்கே (Suresh Chavhanke) இது குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்தார். முகேஷ் விடுவிக்கப்பட்டதாக சுரேஷ் பின்னர் தெரிவித்திருந்தாலும் காவல்துறையினர் அதிகாரபூர்வமாக இதனை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினருக்கு இடையில் மீண்டும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

இதைதொடர்ந்து, குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல, கம்பாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் போலீசாரின் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்தப் பகுதிகளில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்பட்ட நிலையில் புதிய கலவரம் தொடர்பாக சுமார் 60 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 55 பேர் பலியாகினர்.
இந்த மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாகாண போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மத மோதல்கள் குறித்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த மதமும் அல்லது கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது அவசியம்” என்று கூறினார்.
மேலும், “வெவ்வேறு மத நம்பிக்கை உள்ள மக்களிடம் நல்லிணக்கம் இல்லாதவரையில், நமது அன்றாட பணிகளை நாம் செய்து முடிப்பது சாத்தியம் இல்லாமல் போய் விடும். இந்த பிரச்சினையில், மத தலைவர்கள் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்; வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். #Nigeria #CommunalViolence