search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complain to police"

    • உதிரிபாகம் வழங்கிய கணக்கு குறித்து கேட்டுள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் தனியார் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது.

    இதில் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதி சேர்ந்த விக்னேஷ் (வயது23) என்பவர் மெக்கானிக் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    மேலும் சர்வீஸுக்கு வரும் பைக்குகளுக்கு உதிரி பாகங்கள் வழங்கி கணக்கு எழுதி வைப்பதும் செய்து வந்துள்ளார்.

    இதனால் அதே நிறுவனத்தில் மேற்பார்வை யாளராக பணிபுரிந்து வருபவர் நேற்று முன்தினம் உதிரிபாகம் வழங்கிய கணக்கு குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது நண்பர்களை வரவழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கை யர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் நிறுவனத்தில் பணி புரியும் மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×