என் மலர்
நீங்கள் தேடியது "Complaint to Officer"
- உப்பளம் தொகுதியில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர் கலங்கலாக பழுப்பு நிறத்தில் வந்தது.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தத்தை சந்தித்து முறையிட்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதியில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர் கலங்கலாக பழுப்பு நிறத்தில் வந்தது. இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தத்தை சந்தித்து முறையிட்டார். அவர் உதவி பொறியாளர் வெங்கடேசனை அழைத்து உடனே சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தினார்.
மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதாகவும் அதனை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
- மல்லூர் ஊருக்குள் வராமல், நெடுஞ்சாலையில் பஸ்கள் செல்வதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- மல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லதா மற்றும் துணைத்தலைவர் அய்யனார் ஆகியோர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லூர் டவுன் பஞ்சாயத்து உள்ளது. இந்த வழித்தடத்தில், தினசரி 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மல்லூர் வந்து, பஸ் மூலம் வெளியிடங்களுக்கு செல்கின்றனர்.
மல்லூர் ஊருக்குள் வராமல், நெடுஞ்சாலையில் பஸ்கள் செல்வதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து, மல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லதா மற்றும் துணைத்தலைவர் அய்யனார் ஆகியோர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை சேலம் தெற்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் சந்திர சேகர், புறநகர் டி.எஸ்.பி., தையல்நாயகி ஆகியோர் மல்லூர் புற வழிச்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். தொட ர்ந்து மல்லூர் ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையில் செல்ல முயன்ற 20-க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி ஊருக்குள் திருப்பி விட்டனர்.
மேலும் மல்லூர் வழியாக பஸ்களை இயக்கும்படி, டிரைவர், கண்டக்டர்களை அறிவுறுத்தினர். மல்லூர் புறவழிச்சாலையில் விபத்தை தடுக்க, மாற்று பாதை அமைத்தல் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் வேங்கை எம்.அய்யனார் உடனிருந்தார்.