என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "condoles"
- நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
- டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரது மாசற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
டெல்லி கணேஷ் ஏற்று நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களால், அவர் என்றும் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தவர்.
அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
ஓம் சாந்தி..!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Deeply saddened by the passing of the illustrious film personality, Thiru Delhi Ganesh Ji. He was blessed with impeccable acting skills. He will be fondly remembered for the depth he brought to each role and for his ability to connect with viewers across generations. He was also…
— Narendra Modi (@narendramodi) November 10, 2024
- தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
- 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
- தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
- தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்த்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், " குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்" என்றார்.
- காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
- லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
லக்கிசராய்-சிகந்திரா பிரதான சாலையில் உள்ள பிஹராவுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் லாரியும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குறைந்தது ஒன்பது பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் வீர் பாஸ்வான், விகாஸ் குமார், விஜய் குமார், திபானா பாஸ்வான், அமித் குமார், மோனு குமார், கிசான் குமார் மற்றும் மனோஜ் கோஸ்வாமி என கண்டறியப்பட்டுள்ளது.
லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
கேரள மாநிலம் கோட்டயம் பாலா என்ற இடத்தை சேர்ந்தவர் கே.எம்.மாணி (வயது 86). கேரள காங்கிரஸ் (மாணி) கட்சி தலைவரான அவர் மூச்சுதிணறல் காரணமாக கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாணி மரணமடைந்த தகவல் கிடைத்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கே.எம்.மாணியின் உடல் இன்று காலை சொந்த ஊரான கோட்டயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாளை (11-ந்தேதி) பிற்பகல் அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.
மாணியின் மகன் ஜோஸ் கே.மாணியும், தந்தை வழியில் அரசியலில் குதித்து உள்ளார். அவர் தற்போது எம்.பி.யாக உள்ளார்.
வக்கீலாக தனது வாழ்க்கையை தொடங்கிய மாணி 1960-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த அவர் கோட்டயம் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக 1964-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
1965-ம் ஆண்டு முதல் முறையாக பாலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டார் தொடர்ந்து 53 ஆண்டுகள் இதே தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை கே.எம்.மாணிக்கு மட்டுமே உண்டு.
நிதி மந்திரியாக கே.எம். மாணி இருந்தபோது 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து அதிலும் சாதனை படைத்தார். #KMMani #RIPKMMani
முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், ராணுவ மந்திரியாக பதவி வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முக தன்மைகளை கொண்ட இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை மந்திரியானார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அச்சமற்ற, வெளிப்படையான மற்றும் தொலைநோக்குடன், அவர் நம் நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பை ஆற்றி உள்ளார். அவர் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.
இதேபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அவைத் தலைவர் கோயில் பிள்ளை மாரடைப்பால் மரண மடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
ஆரம்ப கால கழக உடன்பிறப்பு கோயில் பிள்ளை கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு கூறியுள்ளனர். #ADMK
பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-
தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளு மன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன்விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச் சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்து அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது ஆணித்தரமான திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-
சோம்நாத் சாட்டர்ஜி ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரர். புகழ்பெற்ற மனித உரிமை போராளி நிர்மல் சந்திர சாட்டர்ஜியின் புதல்வரான சோம்நாத் சாட்டர்ஜி தலைசிறந்த கல்வியாளர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 10 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொது வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடை பிடித்தவர். மக்களவைத் தலைவராக பணியாற்றிய போது அரசு மாளிகையில் தங்கியிருந்தபோது தமது சொந்த தேவைகளை சொந்த செலவில் நிறைவேற்றிக் கொண்டார். அவரது மறைவு இடதுசாரி அரசியலுக்கும், நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வேதனைக்குரியது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எவ்வாறு செயல்பட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கும், நாட்டிற்கும் பயன்தர வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருந்தவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், மேற்கு வங்கத்திற்கும் பேரிழப்பு. அது மட்டுமல்ல அவரது இழப்பு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன்:-
மூத்த கம்யூனிஸ்டு தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன். பத்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
சோம்நாத் சாட்டர்ஜி நாட்டில் உள்ள ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் நலனுக்காக ஓயாமல் குரல் கொடுத்தவர். இந்திய அரசியலில் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SomnathChatterjee
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்