என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress"

    • கைது செய்யப்பட்டுள்ள ஷிஜாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.
    • திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷொரனூர் கணேஷகிரி பகுதயில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான மின்னணு பொருட்கள் திருட்டு போகின. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பள்ளியில் லேட்டாப்கள் உள்ளிட்ட பொருட்களை திருடியது கோட்டயம் மாவட்டம் வைக்கம் வடக்குமூர் பகுதியை சேர்ந்த ஷிஜாஸ்(வயது40) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷொரனூர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது. பாலக்காடு மாவட்ட பகுதியில் மட்டும் அவர் 16-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். அவர் லேட்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

    திருடிய பொருட்களை காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் பதுக்கி வைத்தபடி இருந்திருக்கிறார். இதையடுத்து அந்த அலுவலகத்துக்கு சென்ற போலீசார் பார்வையிட்டனர். அப்போது அங்கு சாக்குமூட்டைகளில் லேட்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் இருந்தன. ஷிஜாஸ் திருடி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் போலீசார் செய்தனர்.

    அந்த தொழிற்சங்க அலுவலகத்தை சமீபகாலமாக சங்கத்தின் நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். அதனை நோட்டமிட்ட ஷிஜாஸ், அந்த அலுவலகத்தை திருட்டு பொருட்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இதற்காக அந்த அலுவலகத்தின் கதவில் ஏற்கனவே போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து விட்டு, புதிய பூட்டை வாங்கி போட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.

    தொழிற்சங்க அலுவலகத்தை நிர்வாகிகள் வெகு நாட்களாக பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்தது ஷிஜாசுக்கு மிகவும் வசதியாக இருந்துள்ளது. அவர் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருவது ஐ.என்.டியூ.சி. நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷிஜாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.

    • ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள்.
    • ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் சூப்பர்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை நிறுவனத்தின் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துககளைத் தங்கள் ஆட்சியில் அபகரிக்க முயன்ற சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நூதன ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை.

    அந்த நிறுவனத்திற்கு ரூ.90 கோடியைக் கடனாகக் கொடுப்பது போல் பாசாங்கு காட்டிவிட்டு பின்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதன் மொத்த பங்குகளையும், ராகுல் காந்தியை முக்கிய பங்குதாரராகக் கொண்ட "யங் இந்தியன்" என்ற நிறுவனத்திற்கு முறைகேடாக மாற்றியுள்ளது காங்கிரஸ்.

    இத்தனைக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போன்றோர் பங்கு வகிக்கும் பழமையான அந்த நிறுவனத்தின் சொத்துக்களையே தங்கள் ஆட்சியில் சத்தமில்லாமல் சுருட்டிய காங்கிரஸ். எத்தனை அப்பாவி மக்களின் உழைப்பையும் சூறையாடியிருக்கும்?

    அதிகாரத்தை கருவியாகக் கொண்டு காங்கிரஸ் தான் இத்தனை ஊழல்களில் ஊறியது என்றால். அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வும் டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல் செய்து காங்கிரசுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்து வருகிறது.

    இப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் பிரதமர் மோடியின் ஊழலற்ற ஆட்சியில் எங்கும் ஓடி ஒளிய முடியாது. எனவே ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம்.

    இப்படி ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் சூப்பர். இந்த கட்சிகளின் ஜோடிப்பொருத்தம் மிகப் பிரமாதமாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அம்பேத்கரின் அரசியலமைப்பில் மதம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உள்ளது.
    • ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களை மத அடிப்படையில் வழங்கி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்களின் உரிமையை பறித்துள்ளது.

    காங்கிரஸ்க்கு முஸ்லிம்கள் மீது உண்மையிலேயே அனுதாபம் இருந்தால், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை கட்சி தலைவராக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு 50 சதவீதம் இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். சமரச அரசியலைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு எதுவும் கிடையாது என விமர்சித்தார்.

    மேலும், "அம்பேத்கரின் அரசியலமைப்பில் மதம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களை மத அடிப்படையில் வழங்கி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்களின் உரிமையை பறித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களில் ஒரு சில அடிப்படைவாதிகளுக்காக திருப்திப்படுத்தும் கொள்கையை காங்கிரஸ் செய்து வந்தபோது, அதே மதத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும், ஏழைகளாகவும் இருந்தனர்.

    இதற்கு மிகப்பெரிய சான்று, 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததுதான்.

    அவர்களுக்கு உண்மையிலேயே முஸ்லிம்கள் மீது அனுதாபம் இருந்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவரை முஸ்லிம் மதத்தில் இருந்து நியமனம் செய்ய வேண்டும். அதை அவர்கள் ஏன் செய்யவில்லை?.

    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொல்வார்கள். ஆனால், அவர்கள் (காங்கிரஸ்) அதை செய்ய மாட்டார்கள். காங்கிரஸில் இருந்து எதையும் செய்யமாட்டார்கள். ஆனால், குடிமக்களின் உரிமையை அவர்களிடம் இருந்து பறிப்பார்கள்" என்றார்.

    • அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    • பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும் கோர்ட்டுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். சட்டத்தை நிலைநாட்ட மோடி அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளை சேர்த்து எந்த மாதிரியான கூட்டணி அமைத்து வந்தாலும் பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள். ஒரு போதும் பாசிச பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அசன் மவுலானா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கோபண்ணா, கே.விஜயன், இதயத்துல்லா, தி.நகர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் முத்தழகன், எம்.வி.ராமசாமி, எஸ்.கே.முகமது அலி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் அரியானா தற்போது டபுள் வேகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.
    • காங்கிரஸ் ஆட்சியில் மின்தடை இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்காகியுள்ளது.

    பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக மின்சார உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    * விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் அரியானா தற்போது டபுள் வேகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.

    * காங்கிரஸ் ஆட்சியில் மின்தடை இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்காகியுள்ளது. இந்தியா மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

    * கர்நாடகா மாநிலத்தில் மின்சாரம் முதல் பால் வரை எல்லாவற்றின் விலையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கீழ் உயர்த்தப்பட்டுள்ளது.

    * காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொது மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இமாச்ச பிரதேசத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் முடங்கியுள்ளதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • கடந்த பதினொரு ஆண்டுகளில் பெட்ரோலியத் துறையிலிருந்து அரசாங்கம் ரூ.39.54 லட்சம் கோடியை ஈட்டியுள்ளது.
    • ஆனாலும், மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.

    பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை உயர்த்தியதன் மூலம் அரசு பொதுமக்களைக் கொள்ளையடிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்  குற்றம்சாட்டியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "இந்திய மக்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். ஒருபுறம், மோடி அரசாங்கம் வரிச்சுமையை அதிகரித்து மக்களின் பைகளைக் கொள்ளையடிக்கிறது. மறுபுறம், தனியார் மற்றும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை அறுவடை செய்கின்றன! இது வெளிப்படையான பொருளாதார சுரண்டல். 

    மே 2014 இல், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.20 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.3.46 ஆகவும் இருந்தது. இப்போது, மோடி அரசாங்கத்தின் கீழ், பெட்ரோல் விலை ரூ.19.90 ஆகவும், டீசல் ரூ.15.80 ஆகவும் உள்ளது. இது 357 சதவீதம் மற்றும் 54 சதவீதம் அதிகரிப்பாகும்.

    கடந்த பதினொரு ஆண்டுகளில் பெட்ரோலியத் துறையிலிருந்து அரசாங்கம் ரூ.39.54 லட்சம் கோடியை ஈட்டியுள்ளது. ஆனாலும், மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. மே 2014 இல், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இன்று அது 65.31 அமெரிக்க டாலர்கள். அதாவது இது 40 சதவீதம் மலிவானது. ஆனால் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தை விட அதிகமாகவே உள்ளன.

    2014 ஆம் ஆண்டில், டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.55.49 ஆகவும் இருந்தது. இன்று அதே பெட்ரோல் ரூ.94.77க்கும், டீசல் ரூ.87.67க்கும் விற்பனையாகிறது. பொதுமக்கள் வெளிப்படையாகக் கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.

    இதனால் யாருக்கு லாபம்? அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து, தனியார் எண்ணெய் நிறுவனங்களும் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் பெரும் லாபம் ஈட்டுகின்றன. அதே நேரத்தில் விலையுயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசலால் சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகின்றன.

    அரசாங்கக் கொள்கைகள் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வாறு பயனளித்துள்ளன என்பதை CAG தணிக்கை செய்ய வேண்டும். இதில் வேண்டுமென்றே அலட்சியம் அல்லது சதி ஏதேனும் இருந்ததா என்பதை சி.வி.சி மற்றும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். பொதுமக்களின் பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.  

    • ஊசி மற்றும் நூலால் நெய்வதில் மேஜிக் செய்கிறார்கள்.
    • ஆனால் நிலைமை அப்படியே தான் இருக்கின்றது என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பேஷன் டிசைன் துறையில் சிறந்து விளங்க முயற்சிக்கும் ஜவுளி கைவினைஞர் விக்கி என்பவரின் கடைக்கு சென்று கலந்துரையாடினார். இதுதொடர்பான வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    ஜவுளி வடிவமைப்புத் துறையில் உச்சத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை நான் ஒருபோதும் சந்தித்தது இல்லை. விக்கி தொழிற்சாலையில் உள்ள கைவினைஞர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையாக உழைக்கிறார்கள்.

    ஊசி மற்றும் நூலால் நெய்வதில் மேஜிக் செய்கிறார்கள். ஆனால் நிலைமை அப்படியே தான் இருக்கின்றது. அவர்களது திறமைக்கு எந்தப் பாராட்டும் இல்லை.

    மற்ற தொழில்களைப் போலவே பகுஜன்களுக்கு ஜவுளி மற்றும் பேஷன் துறையில் பிரதிநிதித்துவம் இல்லை. கல்விக்கான அணுகல் அல்லது நெட்வொர்க்கில் இடம் இல்லை.

    உழைப்பாளிகளாக இருந்தபோதிலும் இந்த இளைஞர்கள் புறக்கணிப்பு மற்றும் அநீதியின் தீய வட்டத்தில் சிக்கியுள்ள மகாபாரதத்தின் அபிமன்யு போன்றவர்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எனது போராட்டம் இந்த தீய வட்டத்தை உடைப்பதாகும் என பதிவிட்டுள்ளார்.

    • அமித்ஷா புகைப்படத்தை தீ வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகே நேற்று, சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, கருப்பு நிற புறாக்களை பறக்க விட்டும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும், அமித்ஷா புகைப்படத்தை தீ வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 192 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை புரிய இருக்கிறார்.
    • தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற 'உள்துறை மந்திரி அமித்ஷாவே திரும்பிப் போ' என்ற கண்டனக் குரல் ஒலிக்கிற வகையில் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை புரிய இருக்கிறார். அவருக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிற வகையில், எனது தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற 'உள்துறை மந்திரி அமித்ஷாவே திரும்பிப் போ' என்ற கண்டனக் குரல் ஒலிக்கிற வகையில் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிரிழந்தார்.
    • டி.எஸ்.பி தலைமையில் 24 காவலர்கள் 7 குண்டுகள் முழங்க குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிரிழந்தார்.

    குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், குமரி அனந்தனின் உடல் இறுதி சடங்கிற்காக ஊர்வலமாக வடபழனி மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    பிறகு அங்கு, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    டி.எஸ்.பி தலைமையில் 24 காவலர்கள் 7 குண்டுகள் முழங்க குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வடபழனி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

    • கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
    • தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும்.

    குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சி பணிக்கு உதவி செய்யாதவர்கள் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக கார்கே பேசியதாவது:-

    கட்சியின் அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்டத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். எனவே, அவர்கள் கட்சியின் வழிகாட்டுதல்களின்படி பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும்.

    நாட்டின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் மூன்று கட்டங்களாக அழைத்து பேசியுள்ளோம்.. ராகுல் காந்தியும் நானும் அவர்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களைப் பெற்றோம். எதிர்காலத்தில், தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்டத் தலைவர்கள் ஈடுபாடு இருக்கும்.

    கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும்.

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன்.
    • தமிழே தன் மூச்சென தமிழ் திருப்பணி செய்த பெருவாழ்வை போற்றி தமிழக அரசு தகைசால் விருது வழங்கி பெருமை கொண்டது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான குமரிஅனந்தன் மறைவு செய்தி அறிந்து துயருற்றேன்.

    பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன். தமிழே தன் மூச்சென தமிழ் திருப்பணி செய்த பெருவாழ்வை போற்றி தமிழக அரசு தகைசால் விருது வழங்கி பெருமை கொண்டது.

    ஏராளமான நூல்கள், எண்ணற்ற மேடைகளை கண்ட குமரி அனந்தன் தமிழால் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்.

    குமரிஅனந்தன் மறைவால் வாடும் சகோதரி தமிழிசை உள்ளிட்ட குடும்பத்தினர், காங்கிரஸ் தொண்டர்கள், சொந்தங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். 

    ×