search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Constituency realignment plan"

    • எதிர்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
    • உத்தரபிரதேசம், பிகாா் மாநிலங்கள் 11 தொகுதிகளை கூடுதலாக பெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் சமீபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு, எவையெல்லாம் பலன் பெறும் என்பதை காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் விளக்கியுள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்று முதல் 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். அதே நேரம், உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் 10 முதல் 11 பாராளுமன்ற தொகுதிகளைக் கூடுதலாகப் பெற வாய்ப்புள்ளது.

    மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களே, தொகுதி மறுசீரமைப்பால் பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் நிலையை சந்திக்கும்.

    அந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்கான தண்டனையாக இது அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தலா 8 தொகுதிகளையும், மேற்கு வங்காளம் 4, ஒடிசா 3, கா்நாடகா 2, இமாசல பிரதேசம் 1, பஞ்சாப் 1, உத்தரகாண்ட் 1 தொகுதியை இழக்க நேரிடும்.

    உத்தரபிரதேசத்தில் 11, பீகாரில் 10, ராஜஸ்தானில் 6, மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகள் அதிகரிக்கும். ஜாா்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சத்தீஸ்கரில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கும்.

    அசாம், ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரா மாநிலஙகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் இழப்போ அல்லது பலனோ இருக்காது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

    ×