search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Continued looting"

    • ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் சுற்றி உள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, டாஸ்மார்க் அருகே ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் (28), ராஜவேணி (32), பரிமளா (36) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டியில் ராமநத்தத்தில் இருந்து அரங்கூர் சென்ற போது திட்டக்குடி ராம நத்தம் நெடுஞ்சா லையில் உள்ள பெரங்கியம் அரங்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிம்ரன் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர்.

    ஆனால் திருட முடியவி ல்லை இந்த வழிப்பறியில் ஸ்கூட்டியில் வந்த 3 பெண்களும் கீழே விழு ந்ததில், ராஜவேணி படுகா யம் அடைந்தார். மற்ற 2 பெண்கள் சிறு காயமும் ஏற்பட்டு ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜவேணி மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஒரு வாரத்தில் மட்டும் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக ஸ்கூட்டியில் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறையினர் விரைந்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×