search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continuous flow"

    • ெசஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தில் கலெக்டர்-இந்திய கடற்படையினர் பங்கேற்றனர்.
    • 188 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ளன.

    ராமேசுவரம்

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அனுமதியுடன் தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள இப்போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கி றார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வுள்ளனர். 188 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ளன. இது தொடர்பாக பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்து 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் இந்திய கடலோர காவல்படை கமாண்டன்ட் ஷா நவாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரிச்சல்முனையில் தொடங்கிய ஜோதி தொடர் ஓட்டம் தனுஷ்கோடியில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஹோவர் கிராப்ட் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் கடல் வழியாக மண்டபம் வந்து சேர்ந்தனர்.

    ×