என் மலர்
நீங்கள் தேடியது "cooking"
- பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கு ஏற்றது.
- அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.
டீ டைம் என்று சொன்னதும் அனைவரின் நினைவுக்கு வருவது ஒரு கிளாஸ் டீயும், இரண்டு பிஸ்கட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த டீ பிஸ்கட்டுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இன்று நாம் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். கடைகளில் வாங்கும் பிஸ்கட்டில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்கள் எதையும் சேர்க்காமல் நாம் நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அருமையான பிஸ்கட்டை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கண்டன்ஸ்டு மில்க்- 1 பாட்டில்
சோளமாவு (கான்பிளவர்)- ஒரு கப்
வெண்ணெய்- 25 கிராம்
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள கான்பிளவர் மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பவுளில் கண்டன்ஸ்டு மில்கை ஊற்றி அதில் சிறிது சிறிதாக கான்பிளவர் மாவை சேர்த்து கிளர வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு கலவை வந்தவுடன் அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளற வேண்டும். வெண்ணெய் சேர்த்தவுடன் மாவுக்கலவையை நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் பிஸ்கட்டுகளாக திரட்டி ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் வரிசையாக அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அடி கனமான இரும்புக் கடாயின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதை அடுப்பில் 10 நிமிடம் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். பின்னர் அதில் தயாராக பிஸ்கட்டுகளை அடுக்கி வைத்துள்ள தட்டை உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து திறந்து பார்க்க வேண்டும். கிரிஸ்பியான பட்டர் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பிஸ்கட்டுகளை எடுத்து காற்று புகாத டப்பாவில் வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
குழந்தைகள் பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக சாப்பிடுவதற்கும் மிகவும் உகந்தது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.
- உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், குடும்பத்தினர் இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.
- இளநீரே சுவையானது; சத்தானது. அதை பயன்படுத்தி பாயாசம் என்றால், யாருக்குத்தான் பிடிக்காது?!
இளநீர் பாயாசம் என்கிற பெயரைக் கேட்டாலே, உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊறியிருக்க வேண்டும். இளநீரே சுவையானது; சத்தானது. அதை பயன்படுத்தி பாயாசம் என்றால், யாருக்குத்தான் பிடிக்காது?!
மிக எளிமையாக இந்த இளநீர் பாயாசத்தை செய்துவிடலாம். குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் இதை விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், குடும்பத்தினர் இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.
தேவையான பொருட்கள்:
இளநீர்- 2
தேங்காய் பால்- 500 மி.லி.
ஏலக்காய்பொடி- ஒரு ஸ்பூன்
பால்- ஒரு லிட்டர்
முந்திரி, திராட்சை- தலா 2 ஸ்பூன்
நெய்- 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் முதலில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை சேர்த்து நிறம்மாறும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
இளநீர் முற்றியதாக இல்லாமல் இளம் வழ்க்கையாக இருக்கும் காயாக பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். இளநீர் வழுக்கையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் தேங்காயை இளநீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய அடிகனமான கடாயில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்றாக குறுகி வரும் அளவிற்கு காய்ச்ச வேண்டும். அதன்பிறகு அடுப்பை அணைத்து சிறிதுநேரம் ஆற வைக்க வேண்டும். மிதமான சூடு இருக்கும் போதே நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள நறுக்கிய இளநீர் வழுக்கை தேங்காய், அரைத்த இளநீர் தேங்காய் விழுது மற்றும் வறுத்த முந்திரி திராட்சை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.
இந்த கலவையை நன்றாக கிளறி அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் பால் சேர்த்து கிளற வேண்டும். குறிப்பாக இதனை அடுப்பை அணைத்த பிறகே சேர்க்க வேண்டும். சுவையான இளநீர் பாயாசம் தயார். இதனை சூடாகவும், ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
பண்டிகை காலங்களிலும், வெயில் காலங்களிலும் இதனை செய்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டிஷ்சாக இது இருக்கும். கடைகளில் பாட்டில்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட ஜூஸ் வகைகளை வாங்கி குடிக்காமல் வித்தியாசமாக இதனை செய்து பருகிப்பாருங்கள். உங்களுடைய ஃபேவரட் லிஸ்டில் கூட இதனை சேர்க்கலாம் அந்த அளவில் சுவையாக இருக்கும்.
- நாம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிய முறையில் ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுக்கலாம்.
- ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் சாப்பிடலாம்.
"பிரிக்க முடியாதது எதுவோ?" என்ற உடனே நினைவுக்கு வருவது திருவிளையாடல் டயலாக் தான். அதுபோல 'குழந்தைகளும் ஸ்நாக்சும்' என்று தான் பதில் வரும். அந்தளவுக்கு குழந்தைகள் தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஆனால் அவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா? அவர்கள் விரும்பும் வகையில் நாம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிய முறையில் ஆரோக்கியமான ஸ்நாக் வகைகளை செய்து கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் கடைகளில் விற்பனை செய்யக்கூடிய விதிவிதமான ஜெல்லிகளை வாங்கி சாப்பிடுகின்றனர்.
அதை நாம் குழந்தைகளுக்கு ஏற்றவகையிலும், ஆரோக்கியமாக எவ்வாறு என்று யோசிக்கும்போது இந்த இளநீர் ஜெல்லி நினைவுக்கு வந்தது. இந்த இளநீர் ஜெல்லி வித்தியாசமாகவும், குழந்தைகள் நிச்சயம் விரும்பும் வகையிலும் இருக்கும். வாங்க இந்த இளநீர் ஜெல்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடல்பாசி- 10 கிராம்
இளநீர்- 1
உப்பு- ஒரு சிட்டிகை
சர்க்கரை- 100 கிராம்
செய்முறை:
கடல்பாசியை நீரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 250 கிராம் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ந்ததும் ஊறவைத்த கடல்பாசியை அதில் சேர்க்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
அதன்பிறகு 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அதில் இளநீரை சேர்க்க வேண்டும். அதனுடன் இளநீநில் உள்ள வழுக்கைகளை நீட்ட நீட்டமாக வெட்டி அதில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கிளறி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். ஆறியதும் ஜெல்லி பதத்தில் இருக்கும் இளநீர் ஜெல்லிகளை சதுரம் சதுரமாக வெட்டி பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் சாப்பிடலாம்.
- முட்டை சேர்க்காமல் செய்யும் ரவா கேக்
- குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ரவையை வைத்து குழந்தைகளுக்கு பல ஈவ்னிங் ஸ்நாக்குகளை தயார் செய்யலாம். அந்த வகையில் ஓவன் இல்லாமல் ரவையை வைத்து முட்டை சேர்க்காமல், எப்படி சுலபமான முறையில் கேக் செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை- 2 கப்
சர்க்கரை- ஒரு கப்
தயிர்- 3 கரண்டி
பால்- ஒரு லிட்டர்
எண்ணெய்- 3 ஸ்பூன்
டூட்டி புரூட்டி- 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
ரவையை மிக்சி ஜாரில் பொடித்து எடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், தயிர் மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். அதில் பொடித்த ரவை மற்றும் பால் சிறுகச்சிறுக கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அந்த கலவையை 10 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும்.
இதன்பிறகு இந்த கலவையில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கலக்கி அந்த கலவை கட்டியாக இருந்தால் அதில் பால் சேர்த்து கலந்து அதில் டூட்டி புரூட்டியை சேர்த்து இதனை ஒரு கேக் செய்யும் பாத்திரத்தின் உள்ளே வெண்ணெய் தடவி அதனுள் பட்டர் பேப்பர் வைத்து அதில் இந்த கேக் கலவையை ஊற்ற வேண்டும்.
அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் கேக் கலவையை அதனுள் வைத்து ஆவி வெளியே போகாத அளவிற்கு பாத்திரத்தை நன்றாக முட வேண்டும் 15 நிமிடங்கள் கழித்து அதனை திறந்து பார்க்கவும். அதில் ஒரு குச்சியை வைத்து குத்தி பார்த்தால் குச்சியில் அந்த கலவை ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வந்துள்ளது என்று அர்த்தம். சுவையான ரவா கேக் தயார்.
அந்த கேக்கை ஒரு வட்ட வடிமான பிளேட்டில் போட்டு அதனை கேக் வடிவத்தில் கட் செய்து எடுத்து சூடு ஆறியதும் பரிமாறவும். இந்த கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். முட்டை சேர்க்காமல் மிகவும் மிருதுவான ரவா கேக் செய்ய வேண்டுமா முயற்சி செய்து பாருங்கள்.
- வித்தியாசமான சுவையை கொடுக்கும்.
- குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும்.
பாயாசம் என்றாலே நமக்கு பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் நினைவுக்கு வரும். ஆனால், இம்முறை வித்தியாசமான பாயாசங்களை முயற்சி செய்து பார்க்கலாம். இது உண்மையில் வித்தியாசமான சுவையை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், விருந்துகளில் சிறப்பு சேர்க்கும்.
தேவையான பொருட்கள்:
பிரட் - 4 துண்டுகள்
சர்க்கரை- 2 கப்
சேமியா- அரை கப்
பால்- ஒரு லிட்டர்'
நெய்- தேவையான அளவு
முந்திரி, பாதாம்- அலங்கரிக்க
கான்பிளவர்- 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகளை பிய்த்து போட்டு பிரட் துண்டுகள் மூழ்கும் அளவிற்கு பால் ஊற்றி பிரட் துண்டுகள் நன்றாக ஊறியதும் அதனை நன்றாக கலந்து அதில் கான்பிளவர் மாவை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
அந்த உருண்டைகளை ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, பாதாமை வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உருட்டி வைத்து உருண்டைகளை அதில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே கடாயில் மீண்டும் சிறிதளவும் நெய் சேர்த்து அதில் சேமியாவை நிறம் மாறும் வரை வறுத்து அதில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதி வந்ததும் அதில் சர்க்கரை ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி மற்றும் வறுத்த பிரட் உருண்டைகளை சேர்க்க வேண்டும். பால் கொதித்து உருண்டைகள் பாலில் நன்றாக ஊறி வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். அருமையான பிரட் உருண்டை பால் பாயாசம் தயார். இதனை சூடாகவும் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
- கேரட் கப் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- ஈவ்னிங் ஸ்நாக்காக டீயுடன் சேர்ந்து பரிமாற மிகவும் ஏற்றது.
கடைகளில் கிடைக்கும் கேக் வகைகளை பதப்பத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றனர். அதையும் நாம் குழந்தைகள் விருப்பத்திற்காக வாங்கி கொடுக்கிறோம். இவ்வாறு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் இல்லாத பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்கப்படும் பொருட்களை வாங்குவதை விடுத்து வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எளிதாக செய்யக்கூடிய கேரட் கப் கேக் எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட்- 1/4 கிலோ
பால்- 250
மைதா- 250 கிராம்
நாட்டு சர்க்கரை- 500 கிராம்
பட்டை தூள்- கால் டீஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
பட்டர்- 100 கிராம்
கெட்டி தயிர்
வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்
டிரை கிரேப்ஸ்- அலங்கரிக்க
செய்முறை:
ஒரு பவுளில் பட்டர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நன்றாக கரைந்து வந்ததும் அதில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, வெண்ணிலா எசன்ஸ், கெட்டி தயிர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து எடுக்கவும். கட்டியாக இருந்தால் அதில் சிறிது சிறிதாக பால் சேர்த்து கலக்கவும்.
பின்னர் இந்த கலவையில் துருவிய கேரட், டிரை கிரேப்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கேக் கலவையை ஒரு அடிகனமான பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடத்திற்கு அதனை ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆன பிறகு கேக் கலவையை பேப்பர் கப் வடிவங்களில் ஊற்றி அதனை ஒரு பிளேட்டில் வைத்து 25 நிமிடத்திற்கு ஆவி வெளியே போகாத அளவுக்கு மூடி வைத்து சமைக்க வேண்டும்.
நன்றாக வந்துள்ளதா என்பதை ஒரு பல்குத்தும் குச்சி வைத்து கேக் கலவையில் குத்திப்பார்த்து சோதித்து பார்க்கவும். கேக் ஒட்டாமல் வர வேண்டும். அவ்வாறு ஒட்டாமல் வந்தால் கேக் தயார். கேரட் கப் கேக் மீது துருவிய பிஸ்தா சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான கேரட் கப் கேக் தயார்.
- சப்போட்டாவை வைத்து வித்தியாசமான முறையில் கேசரி.
- கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன் வித்தியாசமான ருசியில் இருக்கும்.
தேவையான பொருட்கள்
சப்போட்டா பழம்- 8
சர்க்கரை- 1/2கப்
ரவை- 1/2கப்
பால்- 1/4கப்
நெய்- 1/4கப்
பாதம், முந்திரி, பிஸ்தா- 1/2கப்
ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
செய்முறை:
நன்கு பழுத்த சப்போட்டா பழங்களை எடுத்து தூள் உரித்து வைத்துக் கொள்ளவும். தோல் நீக்கிய சப்போட்டா பழங்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் சேர்த்து சூடானதும், நறுக்கி தயாராக வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும். அதே கடாயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் பால் சேர்த்து கலந்துவிடவும்.
அதன்பிறகு சர்க்கரை சேர்த்து கட்டி ஏற்படாமல் நன்கு கலக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள சப்போட்டா விழுது, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். மேலும் கொஞ்சம் பால் சேர்த்து இந்த கலவையை மூடி வைக்க வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சப்போட்டா பழ கேசரி தயார்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் பான்கேக்
- விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளிடம் செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- கால் கப்
நாட்டு சர்க்கரை கால் கப்
கோகோபவுடர்- 3 ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்
பால்- 100 கிராம்
முட்டை-1
சாக்லேட் சிரப்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நாட்டுசர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ், சாக்லேட் சிரப், உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கி எடுத்துக்கொள்ளவும்.
இந்த கலவையை மாவுக்கலவையுடன் சேர்த்து கெட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலந்து எடுக்கவும். கட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளவும். சாக்லேட் சிப்ஸ் (விரும்பினால்) இருந்தால் சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த கலவையை தோசை தவாவில் வெண்ணெய் அல்லது நெய் தடவி பான் கேக் ஊற்றி 2 நிமிடத்திற்கு பிறகு திருப்பி போட்டு எடுக்கவும். நீங்கள் விரும்பினால் பான் கேக் மீது சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்கூலுக்கு ஸ்நாக் பாக்சை நிறப்புவதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக கொடுப்பதற்கும் ஏற்றது.
சாக்லேட் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் சாக்லேட் பான் கேக் என்றால் விடவா போகிறார்கள். வித்தியாசமாக செய்து அசத்துங்கள்.
- காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து கட்லெட்களாக செய்து கொடுக்கலாம்.
- தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை அந்தவகையில் மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை.
காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள். வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் உருளைக்கிழங்குக்கு மாற்று கிடையாது. ஏனென்றால் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு தான் காய்கறி கலவை பிரிந்து வராமல் இருக்கச்செய்கிறது.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 5 கிழங்கு
கேரட்- 1
பீன்ஸ்- 6 நம்பர்
குடைமிளகாய்- 2
பட்டாணி- 100 கிராம்
பச்சைமிளகாய்- 2
கார்ன்- அரை கப்
இஞ்சி- ஒரு ஸ்பூன்
சோளமாவு- 2 ஸ்பூன்
மைதாமாவு- 3 ஸ்பூன்
அரிசி மாவு- 2 ஸ்பூன்
வறுத்த சேமியா- அரை கப்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
தனியாத்தூள்- ஒரு ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
சாட் மசாலா- கால் ஸ்பூன்
கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு- ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வேகவைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளான கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, நறுக்கிய பச்சை மிளகாய், கார்ன், குடைமிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சோளமாவு, மைதாமாவு மற்றும் மசாலா வகைகளான மிளகாய்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள், சாட் மசாலா தூள் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக எல்லா காய்கறிகளும், மசாலா வகைகளும் ஒன்றாக திரண்டு வருகிற அளவுக்கு திரட்டி கட்லெட் வடிவத்தில் அதாவது வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் தயார் செய்து அதனை ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைக்க வேண்டும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் மைதாவை நீரில் கரைத்து அதனை தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு தட்டில் மைதா மாவை கொட்டி வைக்க வேண்டும். சேமியாவை நிறம் மாறும் அளவுக்கு வறுத்து உடைத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ளவும்.
ஃப்ரிட்ஜில் வைத்த கட்லெட்டுகளை எடுத்து அதனை மைதா நீர் கலவையில் முக்கி, மைதா மாவில் புரட்டி எடுத்து சேமியாவில் தோய்த்து எடுத்து இதனை ஒரு பிளேட்டில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்க வேண்டும். மறுபடியும் இந்த கட்லெட்டுகளை ஃப்ரிஜில் 10 நிமிடம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இதனை குறைந்தது ஒரு மாதம் அளவிற்கு ஃப்ரீசரில் வைத்தால் கூட கெட்டுப்போகாமல் இருக்கும்.
தேவைப்படும்போது இந்த கட்லெட்டுகளை தேவையான அளவுக்கு ஒரு கடாயில் கட்லெட்டுகள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான சேமியா வெஜிடபிள் கட்லெட் தயார். இதேபோல் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், பன்னீர் கட்லெட் என்று விதவிதமாகவும் காய்கறிகளை தவிர மற்ற பொருட்களை கொண்டு கட்லெட்டுகளை தயார் செய்யலாம். செய்து அசத்துங்கள்.
- பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
- ஒரு பிளேட்டில் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
பலாக்கொட்டை- ஒரு கப்
பலாச்சுளை- ஒரு கப்
பூண்டு - 4 பல் (பொடிதாக நறுக்கியது)
இஞ்சி 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடிதாக நறுக்கியது)
கரம் மசாலாத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - 4 டீஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- டீஸ்பூன்
உலர் பழங்கள்- 2 டேபிள் ஸ்பூன்
சோளமாவு-தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொறிப்பதற்கு
சட்னி தயாரிக்க:
பலாக்கொட்டை - கப் (வேகவைத்தது)
பச்சைமிளகாய் - 1
உப்பு- தேவைக்கு
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
சட்னி செய்முறை
பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும், அதைஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.
பலாப்பழ கபாப் செய்முறை:
ஒரு பிளேட்டில் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் பலாச்சுளைகளை கட் செய்து போட்டு கலந்து சூடான எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்.
பலாக்கொட்டைகளை வேகவைத்து அதன் மேல் தோலை நீக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும். இந்த கலவையுடன் வேகவைத்த பலாக்கொட்டைகளை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
இந்த விழுதுடன் பொடியாக நறுக்கிய உலர் பழங்களை சேர்த்து நன்றாக பிசையவும். இந்த கலவையை விரும்பிய வடிவில் தயார் செய்து, தவாவில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறலாம்.
- ஓணம் பண்டிகைக்கு 27 வகையான சாப்பாடுகளை தயார் செய்வார்கள்.
- ஐந்தே நிமிடத்தில் சூப்பரான ஒரு அப்பம் தயார் செய்யலாம்.
இந்த ஓணம் பண்டிகைக்கு 27 வகையான ருசியான சாப்பாட்டு வகைகளை செய்வார்கள் அப்பேரி, பருப்பு கறி, வாழைக்காய் பொறியல், மாம்பழ பச்சடி, காலன், புளி, இஞ்சி ஜாம், அன்னாசி பச்சடி என்று பலவிதமான பலகாரங்கள் செய்து சாப்பிடுவார்கள். அதேபோல் ரவா அப்பம் செய்து கடவுளுக்கு படைத்து சாப்பிடுவர்.
சமையல் அறையில் சர்க்கரையும், ரவையும் இதனுடன் சேர்க்கக் கூடிய இன்னும் சில பொருட்களும் கட்டாயமாக நம் வீட்டில் இருக்கும். அதை வைத்து வெறும் ஐந்தே நிமிடத்தில் சூப்பரான ஒரு அப்பம் தயார் செய்யலாம் அதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை- ஒருகப்
சர்க்க்ரை- 2 கப்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை
நெய்
செய்முறை:
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்தது அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய்விட்டு அதில் ரவையை நன்ற வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதிக்கும் போது ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டி இல்லாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ரவையை கிளறி 5 நிமிடம் மூடி போட்டு வேகவிட வேண்டும். 5 நிமிடம் கழித்து அதில் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை, நெய் சேர்த்து ஒன்றாக கலந்து கிளற வேண்டும்.
பின்னர் இந்த கலவையை ஒரு பிளேட்டில் கொட்டி ஆறவிட வேண்டும். இந்த கலவை ஆறியதும் இதனை உருண்டைகளாக உருட்டி அதனை வட்டமான வடிவில் அதிரசம் போன்று தட்டி ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது. தட்டி வைத்த அப்பத்துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக பொறித்து எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும். சுவையான ரவா அப்பம் தயார். சூடு ஆறியதும் பரிமாறவும். இதனை சாமிக்கு நைவேத்தியம் செய்து அதன்பிறகு சாப்பிடுங்கள்.
- குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- மாலை வேளைகளில் சூடான தேனீருக்கு சூப்பரான காமினேஷன் உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ்.
பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் சில வீடுகளில் உள்ள அம்மாக்கள் சமைத்துக் கொண்டே இருப்பார்கள். அந்தவகையில் நாம் செய்யும் ஸ்நாக்ஸ் வகைகள் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் அத்துடன் சுவையானதாகவும் இருக்க வேண்டும்.
இதன்படி, மாலை வேளைகளில் சூடான தேனீருக்கு சூப்பரான காமினேஷன் உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ். இந்த ஸ்நாக்ஸ் எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - 4
ரவை -1 கப்
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு ஸ்நாக்ஸ் என்பதால் சாப்பிடும் போது வாயில் அகப்படக்கூடாது.
பின்னர் ஒரு பவுளை எடுத்து அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதற்கு தேவையான உப்பு மற்றும் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக நீரை கொதிக்க விட வேண்டும். கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் சளித்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறும்போது போது கட்டி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின்னர் அந்த மாவுக்கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வேகவைத்த தோலுரித்த உருளைக்கிழங்கை நன்றாக் மசித்து இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாவுக்கலவையுடன் வெட்டி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.
இதனை 10 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும். பின்னர் இந்த மாவுக் கலவையை விரல்கள் போன்று உருட்டி எடுத்து தனியாக ஒரு பிளேட்டில் வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விரல்கள் போன்று தயார் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஃபிங்கர்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் எதிர்பார்த்த சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் தயார்.