search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cops"

    • கணவர் கருப்பாக இருப்பதால் மனைவி அடிக்கடி அவருடன் சண்டையிட்டுள்ளார்.
    • நிறத்தைக் காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்து சென்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. விஷால் சுற்றே கருப்பாக இருப்பதால் திருமணமானது முதல் மனைவி அவரை கிண்டல் செய்து வந்ததுடன், நிறத்தைக் காரணம் காட்டி கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இதற்கிடையே, விஷால் மனைவிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கணவன் வீட்டில் வைத்துவிட்டு அந்தப் பெண் தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

    மனைவியை அழைத்துவர அவரது வீட்டிற்கு விஷால் சென்றபோது, கருப்பு நிறத்தை காரணம் காட்டி கணவருடன் திரும்ப மறுத்தார்.

    இதனால் விஷால், தனது தாயுடன் சென்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், தான் கருப்பு நிறமாக இருப்பதால் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வரும் சனிக்கிழமை இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கருப்பு நிறத்தைக் காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்துசென்றது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • 17 வயது சிறுவன் 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை.
    • விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை (Porsche car) அதிவேகமாக (150 கி.மீட்டர் வேகத்தில்) ஓட்டி வந்தபோது, அந்த கார் இரு சக்கர வாகனத்தில் மோதி இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குடிபோதையில் கார் ஓட்டிய அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 15 மணி நேரத்தில் சிறார் நீதி வாரியம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், சாலை விபத்து குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத உத்தரவிட்டது.

    குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமினா? என கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் சிறார் நீதி வாரியம் அந்த சிறுவனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்துள்ளார். மேலும், சிறார் காண்காணிப்பு மையத்தில் ஜூன் 5-ந்தேதி வரை அடைக்க உத்தரவிட்டுள்ளது.

    வாரியத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், குற்றம் கொடூரமானதால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை வயது வந்தவராகக் கருதுவதற்கும் அனுமதி கோரி போலீசார் மீண்டும் வாரியத்தை அணுகினர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார். 

    அந்த சிறுவன் ஓட்டி வந்த சொகுசு காரான 'Porsche Taycan'-க்கான நிரந்தர வாகனப் பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவுக் கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த சொகுசு காரை அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது. விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இந்த வழக்கில் கடமை தவறியதற்காக ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    காவல் ஆய்வாளர் ராகுல் ஜக்டேல் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் விஸ்வநாத் டோட்காரி ஆகியோர், இந்த வழக்கில் இரவு பணியில் இருக்கும் போலீஸ் துணை கமிஷனருக்கு - அவர்களின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் நெறிமுறையை பின்பற்றாததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது.
    • ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற செய்யும் காவல் துறையினரே, அவற்றை மீறலாமா? சிசிடிவி கேமரா மற்றும் ஆன்லைன் சல்லான் முறை போன்ற வசதிகளால், விதிமீறல் சம்பவங்கள் எளிதில் வெளிச்சத்திற்கு வந்துவிடுகின்றன. பல சம்பவங்களில் போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை ஆதாரமாக கொண்டு விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

    இது போன்ற சம்பவங்களில் பொது மக்கள் மட்டுமின்றி போலீசாரும் சமயங்களில் சிக்கி இருக்கின்றனர். அந்த வரிசையில், ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் அரங்கேறி இருக்கிறது.

     

    சம்பவம் பற்றிய வீடியோ டுவிட்டர் தளத்தில் மஞ்சுள் என்பவர் பதிவிட்டுள்ளார். வீடியோவில், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் பைக்கில் இரண்டு போலீசார் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் போலீசார் ஹெல்மட் அணியாமல் செல்கின்றனர். காவல் துறை சீருடையில் பயணம் செய்வதோடு, விதிமீறலில் ஈடுபட்ட போலீசாரிடம், மற்றொரு வாகனத்தில் வந்த பெண் ஒருவர் சட்டம் உங்களுக்கு பொருந்தாதா என்று கேள்வி எழுப்புகிறார்.

    இதனை பெண் ஓட்டும் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை பார்த்த போலீசார், வீடியோ பதிவாவதை தெரிந்து கொண்டு பெண்ணிடம் எதுவும் பேசாமல், வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றனர். போலீசாரை துரத்தி சென்ற பெண் அவர்களை சிக்னல் ஒன்றில் வைத்து பிடித்தார். எனினும், போலீசார் அந்த பெண்ணிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது. இதனை பார்த்த காவல் துறை உயர் அதிகாரிகள் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதித்தனர். போலீசார் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைகவசம் அணிவது கட்டாயம் ஆகும். தலைகவம் அணிவதால் விபத்தின் போது வாகனம் ஒட்டுவோரின் உயிரை காக்கும்.

    புதுடெல்லியில் காஷ்மீரை சேர்ந்த 5 பேரை பலர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #kashmirpeopleattacked
    புதுடெல்லி:

    புதுடெல்லியின் சன்லைட் காலணி என்ற பகுதியில் வசிக்கும் காஷ்மீரை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேரை நேற்றிரவு அப்பகுதியிலிருந்த மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் பேசுகையில், ‘நாங்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதாலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், எங்களை தாக்கியவர்கள் எனது உறவினர்களையும் தாக்கியதுடன் எனது சகோதரியையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

    அவர்கள் தாக்கும்போது 'காஷ்மீர் பயங்கரவாதிகளே வெளியேறுங்கள்' என்று கூறியபடி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அச்சத்துடனேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #kashmirpeopleattacked
    ×