என் மலர்
நீங்கள் தேடியது "Corporation Commissioner Inspection"
- பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
- மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களுக்கு சென்று கமிஷனர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக செய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவற்றை வெளியேற்றி சுகாதார சீர்கேடு ஏற்படா மல் தடுக்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாநகர பகுதியில் உள்ள 4 மண்ட லங்களிலும் பெரும்பாலான தெருக்களில் சமீபத்தில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலைகள் 2 நாட்கள் பெய்த கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் சேதமடைந்து விட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி கிடப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இதையடுத்து கமிஷனர் அவ்வப்போது மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்க ளுக்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.