என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cow slaughter"
- 'வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்புடையது'
- கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் மேலும் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்ஏ.வும் பாஜக மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அங்கு பசுவதை செய்யப்படுவதே காரணம் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து ஊடகத்தினரிடம் அவர் பேசுகையில், 2018 முதல் நடந்த பேரிடர்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், பசு வதை செய்யப்பட்ட பகுதிகளில்தான் அதிக பேரழிவு சமபவங்கள் ஏற்பட்டுள்ளது தெரியும். வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்புடையது.
கேரளாவில் பசு வதை அதிகம் நடப்பதாலேயே இந்த பேரழிவானது ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் மேலும் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
தற்போது உத்தராகண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் வயநாட்டுடன் ஒப்பிடும்போது அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறைவானதே ஆகும் என்று தெரிவித்துள்ளார். அகுஜாவின் கருத்து சர்ச்சையானதை அடுத்து, இது சோககரமாக பேரழிவுக்கு மதச் சாயம் பூசுவதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கூறிய கருத்து மாநிலத்தில் போராட்டத்தை தூண்டி உள்ளது.
- வயதான பசுக்களை வெட்டுவது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் கால்நடைகளை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளை மட்டுமே வதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் வெங்கடேஷ், பசு வதை தொடர்பாக கூறிய கருத்து மாநிலத்தில் போராட்டத்தை தூண்டி உள்ளது. எருமை மாடுகளை வெட்டலாம் என்றால் பசுக்களை ஏன் வெட்டக்கூடாது? என அவர் பேசியிருந்தார்.
'முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மசோதாவில், எருமை மாடுகளை வெட்ட அனுமதித்துள்ளனர். ஆனால் பசு வதை செய்யக்கூடாது என கூறியுள்ளனர். அதுபற்றி விவாதித்து முடிவு எடுப்போம். வயதான பசுக்களை வெட்டுவது, அந்த கால்நடைகளை நிர்வகிப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்' என்றும் அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த கருத்திற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததுடன், கடந்த இரு தினங்களாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது, முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தில் தெளிவு இல்லை என்றும், அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர்.
பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தது.
நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல், காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் பத்வால் கிராமத்தில் 8 பசுக்கள் மற்றும் எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற ஒரு சரக்கு லாரியை ஒரு கும்பல் வழி மறித்து நிறுத்தியது.
லாரியில் இருந்த கால்நடைகளை கீழே இறக்கியது. பின்னர், அந்த லாரிக்கு அக்கும்பல் தீவைத்தது. லாரி டிரைவரும், கிளனரும் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர், அந்த கும்பல், பசு கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே, பக்கத்து மாவட்டமான சம்பாவில், பசு கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 16 கால்நடைகளை மீட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாகனத்தில் இருந்து 3 கால்நடைகளை போலீசார் மீட்டனர். #CowSlaughter #Bulandshahr #PoliceInspector #Riots
ஆர்.எஸ்.எஸ். செயற்குழு தலைவர் இந்திரேஷ் குமார் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற ஹிந்து ஜகரான் மன்ச் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நாடு முழுவதும் கும்பலாக சேர்ந்து சிலர் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் கண்டனத்துக்குரியது. பசுக்கள் கொல்லப்படுவதை எந்த மதமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பசுக்கறி உண்ணும் பழக்கம் நிறுத்தப்பட்டால் சாத்தானால் ஏவப்படும் ஏராளமான குற்றங்கள் நின்றுவிடக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார். #RSSleaderIndreshKumar #Cowslaughter
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் பகுதியில் உள்ள பாஜீரா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் காசிம் (45). இவரது நண்பர் சமைதீன் (55). இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை அவர்களது வயலுக்கு சென்றபோது அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவையும் கன்றுக்குட்டியையும் விரட்டியடிக்க முயன்றனர்.
அப்போது அந்த பகுதியாக வந்த சிலர், இருவரும் பசுவை கொலை செய்ய போவதாக நினைத்து வதந்தி பரப்பியதால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஒரு கும்பல் தடியுடன் வந்தது. அவர்களிடம் விசாரணை எதுவும் நடத்தாமல் கடுமையாக தாக்கியது. இதனால் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அப்போது தங்களை தாக்கிய கும்பலிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். ஆனால் அவர்களுக்கு யாரும் தண்ணீர் தரவில்லை. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் காசிம் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் சமைதீன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்ததும் காசிம் மற்றும் சமைதீனின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் கும்பலிடம் இருந்து சமைதீனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ.பி.கோ. 307 (கொலை முயற்சி), 302 (கொலை) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, உ.பி. காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அந்த புகைப்படத்தில் உள்ள 3 போலீசாரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த புகைப்படம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சில நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. அதனால் தான் இவ்வாறு தூக்கிச் செல்லப்பட்டார். இருப்பினும் போலீசார் கவனக்குறைவாக நடந்துள்ளனர் என டி.ஜி.பி. தெரிவித்தார்.
மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டத்தில் அஞ்சர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அங்கு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் அடித்துகொல்லப்பட்டார். மற்றொருவர் கடுமையான தாக்குதலுக்குட்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இது குறித்து சட்னா மாவட்ட போலீஸ் எஸ்.பி.ராஜேஷ் ஹெங்கெர்கர் கூறியதாவது, அஞ்சர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருவர் மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதாக வெள்ளி அன்று அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது. அதைதொடர்ந்து, 4 பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு விரைந்து அங்கு இறைச்சிக்காக மாட்டை வெட்டிய இரண்டு பேர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், சிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த ஷகில் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் இருந்த மாட்டின் இறைச்சியை போலீசார் கைப்பற்றி இது குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பவன் சிங், விஜர் சிங், போல் சிங் மற்றும் நாரயண் சிங் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க 400 போலீசார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #cowslaughter
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்