என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cricket Tournament"
- கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது.
- அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுமார் 10 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
கீழக்கரை
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டினை முன்னிட்டு அழகப்பா பல் கலைக்கழக இணைப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான பவள விழா ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகு சிறப்பாக நடைபெற் றது.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுமார் 10 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டு மைதானத்திலும் அழகப்பா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றது. அரை இறுதிப் போட்டிகளில் விளையாட கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, ராம நாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியை எளிதில் வீழ்த்தி வெற்றி கோப்பையை தட்டி சென்றது. முதலிடம் பெற்ற கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ரவி பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார்.
இப்பரிசளிப்பு விழாவில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர், அழகப்பா அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை தலைவர் செல்வராஜ் உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் உயிர் தகவ லியல் துறை பேராசி ரியர் ஜெயகாந்தன் மற்றும் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க புரவலர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இப்போட்டிகளின் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனுக்கான விருது கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் தவசலிங் கம் மற்றும் ஜெபராஜ் ஆகி யோருக்கு வழங்கப்பட்டது.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசி ரியர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளையின் செயல் இயக்குனர் ஹாமிது இப்ராஹிம் மற்றும் இயக்குனர் ஹபீப் முகமது ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.
- ஆஷஸ் கிரிக்கெட் அணி நி வீரர் சூர்யா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
- சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் பந்து வீச்சாளர் விஜய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கோத்தகிரி,
கோத்தகிரி காந்தி மைதானத்தில் கோடநாடு கிரிக்கெட் கிளப் சார்பில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் கோத்தகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட 50 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் 3-வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோத்தகிரி ஆஷஸ் கிரிக்கெட் அணியும், ஈளாடா சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஷஸ் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19 ஓவர்கள் மட்டும் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் சூர்யா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களம் இறங்கிய சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி வீரர்கள் மணிகண்டன் 36 ரன்கள், பாக்யராஜ் 30 ரன்கள் மற்றும் ராகுல் 28 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி காலிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் பந்து வீச்சாளர் விஜய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- மகாராஜா பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
- இதனயைடுத்து கிரிக்கெட் வீரர் மகாராஜாவை, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,, நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகாராஜா என்ற விளையாட்டு வீரர் கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதனயைடுத்து கிரிக்கெட் வீரர் மகாராஜாவை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,, நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் ஊக்கத்தொகை பெற்று தரவும், கொரோனா காலகட்டத்தில் தந்தையை இழந்த மகாராஜாவிற்கு அரசு பணி விரைவில் கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
- நெல்லை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
- இறுதி போட்டியில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. அதில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
நெல்லை:
நெல்லை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 10 பாலிடெக்னிக் மாணவ அணிகள் பங்கு பெற்றனர். இறுதி போட்டியில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. அதில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முன்னதாக சங்கர் பாலிடெக்னிக் அணி கால் இறுதியில் நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் அணியை வென்றது. அரை இறுதியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியையும் வென்றது. இறுதிப் போட்டியில் சங்கர் பாலிடெக்னிக் மாணவர் மற்றும் அணி தலைவர் விஸ்வா 43 (22) ரன்கள் குவித்ததோடு, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தன் மூலம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணியை சங்கர் சிமெண்ட் ஆலையின் தலைமை அதிகாரி சரவண முத்து, கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன், உடற் கல்வி இயக்குனர் வரதன், உதவி இயக்குனர் சுந்தர் மற்றும் செல்வம் ஆகியோர் பாராட்டினர்.
- போட்டியில் வருகிற 12, 13-ந் தேதிகளில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
- போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வருகிற 13-ந் (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது.
தென்திருப்பேரை:
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாவடி பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் போட்டி மாவடி பண்ணை மக்கள் நலசங்கம் சார்பில் நடைபெற்றது.போட்டியில் மாவடி பண்ணை அணியும், மணல் மேடு அணியும் கலந்து கொண்டனர். கிரிக்கெட் போட்டியினை ஆழ்வை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
வருகிற 12, 13-ந் தேதிகளில் 30-க்கும் மேற் பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளை யாடுகின்றன. போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி களுக்கு முறையே ரூ. 8 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் பரிசுகள் வருகிற 13-ந் (ஞாயி ற்றுக் கிழமை) வழங்கப்ப டுகிறது. மேலும் அனைத்து அணிகளுக்கும் கோப்பைகள் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஞானையா, கிருஷ்ணசாரதி பண்ணையார், கவுன்சிலர் ஆர்த்தி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை மாவடி பண்ணை மக்கள் நல சங்கம் சார்பில் செய்து இருந்தனர்.
- எம்.ஐ.டி கல்லூரி பேராசிரியர்கள் அணிகள் இடையே போட்டி நடந் தது.
- கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர் மோகன் மற்றும் வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மதகடிப்பட்டு கலிதீர்த் தாள்குப்பம் எம்.ஐ.டி கல் லூரி மைதானத்தில் டி-10 கிரிக்கெட் போட்டி நடந்தது.
டி.சி.எஸ் நிறுவன மனி தவளத்துறை நிர்வாகிகள் மற்றும் எம்.ஐ.டி கல்லூரி பேராசிரியர்கள் அணிகள் இடையே போட்டி நடந்தது.
இதில் எம்.ஐ.டி. அணி வெற்றி பெற்றது. பின்னர் எம்.ஐ.டி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் சுகுமாறன்,செயலாளர் நாராயண சாமி கேசவன் ஆகியோர் வழிகாட்டு தலின்படி கல்லூரி முதல்வர் மலர்க்கண் தலைமையில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் விளையாட்டில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
எம்.ஐ.டி கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறி னார். ஏற்பாடுகளை கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர் மோகன் மற்றும் வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- போட்டியில் திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 29 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
- பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிவலூர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் விஜயன் தலைமை தாங்கினார்.
உடன்குடி:
முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி சிவலூர் சிதம்பரேஸ்வர் மைதானத்தில் சிவலூர் கிரிக்கெட் குழு சார்பாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடர் 4 நாட்கள் நடந்தது. இதில் திருச்செந்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம் ,காயாமொழி உட்பட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 29 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதி போட்டியில் சிவலூர் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. காயாமொழி 2-வது இடத்தையும், காயல்பட்டினம் அணி 3-வது இடத்தையும், நயினார்பத்து அணி 4-வது இடத்தையும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிவலூர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெயராஜ், பட்டுராஜ், சிவலூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செட்டியாபத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வகுமார், திருச்செந்தூர் கீர்த்தி வாசன், தொழிலதிபர் விஜயந்த்ராஜ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் முகமது ஆபித், சிவகுமார், அரவிந்த், செந்தில்குமார், பொறியாளர் அஸ்வின், அஜித் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுகளை வழங்கினர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை சுதனேஷ் குமார், தங்கவிக்ரம், புவன் கவுசிக், அசோக் தவபாலன் உள்ளிட்ட சிவலூர் கிரிக்கெட் குழுவினர் செய்திருந்தனர்.
- கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ஜே.ஆர்.சி. உயர்நிலை பள்ளி மற்றும் பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர்.
- மாநில அளவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.7,50,000 பரிசாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
இதில் மாணவிகள் பிரிவு கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ஜே.ஆர்.சி. உயர்நிலை பள்ளி மற்றும் பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.7,50,000 பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் பாராட்டினர்.
- கமுதியில் நடந்த தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- 24 மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி மைதானத்தில் கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் தென்மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி உட்பட 24 மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியில் மதுரை என்.ஏ.சி.சி. அணியை வீழ்த்தி மதுரை வேலவன் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதலிடம் பெற்ற இந்த அணிக்கு ரூ.50ஆயிரம், பசும்பொன் ஊராட்சிமன்ற தலைவர் ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் வேலவன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் போஸ் செல்லப்பா ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.
2-ம் இடம் பெற்ற மதுரை என்.ஏ.சி.சி. அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகை, கோட்டை மேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் வழங்கப் பட்டது. 3-ம் இடம் பெற்ற கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகை, நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில் முருகன், வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சிரஞ்சீவி ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.
4-ம் இடம் பிடித்த திருப்பூரை சேர்ந்த 22யார்ட்ஸ் கார்மெண்ட்ஸ் அணிக்கு ரூ.10ஆயிரம் பரிசு தொகை, முன்னாள் வடக்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் நேதாஜி சரவணன் சார்பில் வழங்கப்பட்டது.
முதல் 4 இடம் பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டது. அவைகள் முன்னாள் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் ராமையா சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் வழங்கினார்.
இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் தலைவர் காளிமுத்து மற்றும் பலர் செய்திருந்தனர்.
தென் மண்டல அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்திய கோட்டைமேடு நண்பர்கள் அணியை இப்பகுதி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- பின்னலாடை நிறுவனங்களுக்கிடையே நட்புறவை மேம்படுத்த ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.
- 15 ஓவருடன் லீக் சுற்று, 20 ஓவருடன் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடத்த ப்படுகிறது
திருப்பூர் :
திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் தினமும் ஓய்வின்றி உழைக்கின்றனர். தொழில் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபடும் தொழிலாள ர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையிலும் பின்னலாடை நிறுவனங்களு க்கிடையே நட்புறவை மேம்படுத்த நிப்ட்-டீ கல்லூரி ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. அவ்வகையில் 6-வது என்.பி.எல்., கிரிக்கெட் தொடர், வருகிற ஏப்ரல் 2-ந்தேதி துவங்குகிறது. நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் வாரந்தோ றும் ஞாயிற்றுக்கி ழமை போட்டிகள் நடை பெறும். 15 ஓவருடன் லீக் சுற்று , 20 ஓவருடன் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடத்த ப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் மட்டுமே என்.பி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்க முடியும். உள்நாட்டு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனம் என பின்னலாடை துறை சார்ந்த எந்தவகை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளரும் பங்கேற்கலாம்.
தொழிலாளர் அல்லாத வேறுநபர்களை அணியில் சேர்க்க கூடாது. குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரிவ தற்கான அடையாள அட்டை,கடைசி மூன்று மாத சம்பள ரசீது, வீரரின் புகைப்படம், பணிபுரியும் நிறுவன நிர்வாக இயக்குனரின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு என்.பி.எல்., சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
பங்கேற்க விரும்பும் பின்னலாடை நிறுவன கிரிக்கெட் அணியினர் https://www.nifttea.ac.in/npl-2023 என்கிற தளத்தில் வருகிற 27-ந் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு 95971 54111 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- போட்டியை சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப் தொடங்கி வைத்தார்.
- சாத்தான்குளம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வென்று முதல் பரிசை தட்டிச்சென்றது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நேதாஜி விளையாட்டு திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் பல அணிகள் கலந்து கொண்டன. போட்டியை சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப் தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் சாத்தான்குளம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எதிர்த்து நயினார்பத்து அணி மோதியது. இதில் சாத்தான்குளம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வென்று முதல் பரிசை தட்டிச்சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பையை எம்.எல்.ஏ. சார்பில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வி. பார்த்தசாரதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப் அலெக்ஸ், கோ.லிங்கப்பாண்டி ஆகியோர் வழங்கினர். 2-ம் பரிசு பெற்ற நயினார்பத்து அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையை ஆழ்வார் திருநகரி ஒன்றியக்குழு தலைவர் ஜனகர் வழங்கினார். 3-ம் பரிசு பெற்ற சிவத்தையாபுரம் அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையை பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் அழகேசன் வழங்கினார். 4-ம் பரிசு பெற்ற ராயல் ஸ்டிரக்கர் அணிக்கு குட்டம் மணிவண்ணன், சதிஷ் ஆகியோர் பரிசு வழங்கினர். இதில் சாத்தான்குளம் ஒன்றிய அ.ம.மு.க. செயலர் திவாகரன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், பேரூராட்சி கவுன்சிலர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
- உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், வழங்கினார்.
திசையன்விளை:
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 32- க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.இந்த போட்டி 6 நாட்களாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடரின் பரிசளிப்பு விழாவிற்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கினார்.
விழாவிற்கு இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், 2-ம் பரிசை எம்.எம். அணிக்கு ரூ.15,013, சுழற்கோப்பையும் வழங்கினார். 3-வது பரிசை ஐ- மேக்ஸ் ஸ்போர்ட் கிளப் அணிக்கு ரூ.10,013 பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும், ராதா புரம் ஊராட்சி மன்ற கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இடையங்குடி ஜெபகுமார், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர்,எழில் ஜோசப், குமார், முத்தையா,சுகுமார் ஜெபதுரை,சுகிர்தராஜ், பவுல், ரமேஷ், தேவ அலெக்ஸ் அருள், சாம், ரமேஷ், கணிபாய், அமுதன், ஜெபகுமர், ராஜா, சுஜா, வினோகார், ரூபன் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்