என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CSG"
- டி. நடராஜனை 11.25 லட்சம் ரூபாய்க்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
- ஆர். சஞ்சய் யாதவை 22 லட்சம் ரூப்ய் கொடுத்து திருச்சி அணி எடுத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபிஷேக் தன்வரை 12.2 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஏற்கனவே அணியில் விளையாடிய ஜி. பெரியசாமியை 8.8 லட்சம் ரூபாய் கொடுத்து மீண்டும் அணியில் இணைத்துள்ளது.
மேலும், ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:-
1. ஆர். விவேக் (ரூ. 11 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ்
2. எஸ். ஹரிஷ் குமார் (ரூ. 15.4 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ்
3. ஆர். சஞ்சய் யாதவ் (ரூ. 22 லட்சம்)- திருச்சி கிராண்ட் சோலாஸ்
4. டி. நடராஜன் (ரூ.11.25 லட்சம்)- திருப்பூர் தமிழன்ஸ்
5. சந்தீப் வாரியார் (ரூ. 10.5 லட்சம்)- திண்டுக்கல் டிராகன்ஸ்
6. சாய் கிஷோர் (ரூ. 22 லட்சம்)- திருப்பூர் தமிழன்ஸ்
- முதலில் ஆடிய சேப்பாக் 129 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி 71 ரன்னில் ஆல் அவுட்டானது.
நெல்லை:
நெல்லையில் இன்று 25-வது லீக் போட்டி இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது. சிபி 31, சசிதேவ் 25 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. சேப்பாக் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் திருச்சி அணி சிக்கியது. குறிப்பாக, சிலம்பரசன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இறுதியில் திருச்சி அணி 71 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சேப்பாக் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் அணி பெறும் 3வது வெற்றி ஆகும்.
திருச்சி அணி தான் ஆடிய 6 ஆட்டங்களில் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சமமான அளவுக்கு தகுதியான வீரர்கள் உள்ளனர்.
- அணியில் அடித்து ஆடும் பிளேயர்களும் உள்ளனர் என அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் கூறினார்.
சென்னை:
டிஎன்பிஎல் 2023 ஏலம் நேற்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 942 வீரர்கள் பங்கேற்றனர். ஏலத்தில் வீரர்களுக்கான அதிகபட்ச அடிப்படை விலை ரூ.10 லட்சம் என்றாலும், ரவிச்சந்திரன் அஸ்வின், நாராயண் ஜெகதீசன் மற்றும் ஷாருக்கான் போன்ற முக்கிய வீரர்கள் தங்கள் உரிமையாளர்களால் தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.
முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும், வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணியும், சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.
ஐ.பி.எல். போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது. அவர் ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் போனார். சஞ்சய் யாதவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன்மூலம் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக தொகையாக இது இருந்துள்ளது. முன்னதாக, ஹரிஷ் குமாரை 12.80 லட்சத்துக்கும் அபராஜித்தை ரூ.10 லட்சத்துக்கும் பிரதோஷ் 5 லட்சத்துக்கும் அதே அணி விலைக்கு வாங்கியது.
இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பி பிரிவில் இடம்பெற்ற பாபா அப்ரஜித்தை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
இந்நிலையில், டி.என்.பி.எல். ஏலம் தொடர்பாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் வழக்கமான 3 இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். அணியில் சமமான அளவுக்கு தகுதியான வீரர்கள் உள்ளனர். சஞ்சய் யாதவ், ஹரீஸ் என அடித்து ஆடும் பிளேயர்களும் உள்ளனர்.
பிளேயர்சுக்கு இது யூஸ்புல் தான். ஒரு பிளேயரோட டேலண்டுக்கு ஏத்த மாதிரி ஒரு பிரைஸ் வருது, அவங்களுக்கு சாலரி வருது, பிளேயர்சுக்கு இது நல்ல வின் தான் என தெரிவித்தார்.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த 25-வது ‘லீக்’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 19.3 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. ஆரிப் அதிகபட்சமாக 36 ரன்னும், கேப்டன் கோபிநாத் 25 ரன்னும் எடுத்தனர். சிலம்பரசன் 3 விக்கெட்டும், திரிலோக்நாத், வருண் தோத்ரி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 13.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 43 பந்தில் 63 ரன் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். இதன்மூலம் திண்டுக்கல் அணி 5-வது வெற்றியை பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6-வது தோல்வியை தழுவியது. ஒரே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்த அந்த அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கோபிநாத் கூறியதாவது:-
இந்தப்போட்டி தொடரில் பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டோம். முதல் 6 ஓவர்களில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. டூட்டி பேட்ரியாட்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சரியான தொடக்கம் அமைந்ததால் 170 முதல் 180 ரன்கள் வரை குவிக்க முடிந்தது.
தொடக்கம் சிறப்பாக அமையாததே எங்களது தவறு. இதேபோல பந்துவீச்சும் நிலையாக இல்லை. முதல் 4 போட்டிகளில் எங்களுக்கு கிடைத்த சில வாய்ப்புகளை வீணடித்தோம். இது எங்களுக்கு பெரிய பின்னடைவு தான்.
எங்களிடம் திறமைகள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு வீரரும், தங்களை மறுபரிசீலனை செய்து மேம்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்படி சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியின் எஸ் கார்த்திக், பாஸ்கரன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எஸ் கார்த்திக் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையிலும், பாஸ்கரன் ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
3-வது வீரராக களம் இறங்கிய கோபிநாத் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் ரன்குவிக்க இயலவில்லை.
ஏ ஆரிஃப் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 34 பந்தில் 36 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் எம் சிலம்பரசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபிநவ் முகுந்த் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஷாருக் கான் 45 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அந்தோணி தாஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் பி அருண், ஹரிஸ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பரத் ஷங்கர், பாபா இந்த்ரஜித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பரத் ஷங்கர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த எஸ் அரவிந்த் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
3-வது விக்கெட்டுக்கு பாபா இந்த்ரஜித் உடன் சுரேஷ் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் 17-வது ஓவரின் 3-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து 37 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 2 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.
மறுமுனையில் விளையாடிய இந்த்ரஜித் 49 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த இந்த்ரஜித் அடுத்த (53 ரன்கள்) பந்தில் ஆட்டமிழந்தார். ரூபி திருச்சி வாரியர்ஸ் 19-வது ஓவரில் 4 சிக்சருடன் 25 ரன்கள் குவித்தது. இந்த்ரஜித் - சுரேஷ் குமார் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரை ஆர் விஷால் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் சுரேஷ் குமார் ஆட்டமிழந்தார். இவர் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் சேர்க்க ரூபி திருச்சி வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
இதில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.
7.15 மணிக்கும் தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 6.50 மணியளவில் சுண்டப்பட்டது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டொஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்