என் மலர்
நீங்கள் தேடியது "CSK"
- சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன.
- சிஎஸ்கே இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4-ல் தோல்வியடைந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தச் சூழலில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. மும்பை அணி 8-வது இடத்திலும், சிஎஸ்கே அணி 9-வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளைப் பெற வேண்டும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
இதனால், சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன. இந்த ஒன்பது போட்டிகளில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளிலாவது சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். அப்படி ஏழு போட்டிகளில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியின் புள்ளிகள் 16 என்ற அளவை எட்டும். ஆனால், தற்போது சிஎஸ்கே இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, இது மிகவும் கடினமாகத் தெரிகிறது.
- கடந்த நான்கு ஆட்டங்களிலும் நாங்கள் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளோம்.
- நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார் என தோல்வி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த நான்கு ஆட்டங்களிலும் நாங்கள் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளோம். இது மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஹிட்களில் தான் தோல்வியைத் தழுவினோம்.
பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தோம். மேலும் பவர்பிளேவில் நாங்கள் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. இது நாங்கள் எங்களுடைய சிறந்த மற்ற மேம்பட்ட செயல்திறனாகும். மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் எங்கள் சில நேர்மறையான அம்சங்களும் கிடைத்துள்ளன.
என ருதுராஜ் கூறினார்.
- பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.
- சென்னை அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்கு பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் மாஸ்டர் பட விஜய் புகைப்படத்தை பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மாஸ்டர் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ராசின் ரவீந்திரா 36 ரன்களும், ருதுராஜ் 1 ரன்களும், துபே 42 ரன்களும், கான்வே 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டோனி 27 ரன்களில் வெளியேறினார். விஜய் சங்கர் 2 ரன்னும், ஜடேஜா 9 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இதனைதொடர்ந்து 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.
- ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
- சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். அவர் 42 பந்தில் 103 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யான்செனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. ஷஷாங்க் சிங் 52 ரன்களிலும் யான்சென் 34 ரன்களிலும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- ஐபிஎல்லில் வேகமான சதம் அடித்த வீரர்களில் பிரியான்ஷ் ஆர்யா 5-வது இடத்தில் உள்ளார்.
- அன்கேப்டு வீரர்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 8-வது வீரராக ஆர்யா இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் வேகமான சதம் அடித்த வீரர்களில் பிரியான்ஷ் ஆர்யா 5-வது இடத்தில் உள்ளார். மேலும் அன்கேப்டு வீரர்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 8-வது வீரராக ஆர்யா இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல்லில் வேகமான சதம் (எதிர்கொண்ட பந்துகள் மூலம்)
30 - கிறிஸ் கெய்ல் (RCB) vs பி.டபிள்யூ.ஐ, பெங்களூரு, 2013
37 - யூசுப் பதான் (RR) vs மும்பை, மும்பை பிஎஸ், 2010
38 - டேவிட் மில்லர் (KXIP) vs ஆர்சிபி, மொஹாலி, 2013
39 - டிராவிஸ் ஹெட் (SRH) vs ஆர்சிபி, பெங்களூரு, 2024
39 - பிரியான்ஷ் ஆர்யா (PBKS) vs சிஎஸ்கே, முல்லாப்பூர், 2025*
ஐபிஎல் தொடரில் அன்கேப்டு வீரர்களின் சதம்:-
ஷான் மார்ஷ் vs RR, 2008
மணீஷ் பாண்டே vs DEC, 2009
பால் வால்தாட்டி (KXIP) vs CSK, 2009
தேவ்தத் படிக்கல் (RCB) vs RR, 2021
ரஜத் படிதார் (RCB) vs LSG, 2022
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR) vs MI, 2022
பிரப்சிம்ரன் சிங் vs (DC), 2023
பிரியான்ஷ் ஆர்யா (பிபிகேஎஸ்) எதிராக சிஎஸ்கே, 2025*
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இரு அணியும் எந்த வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணியும் எந்த வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.
- கடந்த 2021 வரை சென்னை அணிக்காக விளையாடியவர்.
- கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் கேதர் ஜாதவ். இவர் இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டு வகையில் சிறப்பாக விளையாடியவர்.
இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடி வந்தார். கடந்த 2021 வரை சென்னை அணிக்காக விளையாடிவர். கேப்டன் தோனியின் நம்பிக்கைக்கு உரிய ப்ளேயராக இருந்தார். பின்னர் Unsold ப்ளேயர் ஆனார்.
இதனையடுத்து கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் கேதர் ஜாதவ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த விழாவில் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர் பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவின் துண்டு கேதர் ஜாதவிற்கு அணிவிக்கப்பட்டது. அவருக்கு பாஜக உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
- சென்னை அணியில் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது.
- வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி முதலாவது ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவையும் தோற்கடித்தது. கடந்த ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்னில் அடங்கியது.
உள்ளூரில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா சூப்பர் பார்மில் உள்ளனர். பிரப்சிம்ரன் சிங், மேக்ஸ்வெல், ஷசாங் சிங் நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், மார்கோ யான்சென் வலுசேர்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மூன்று ஆட்டங்களில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
நடப்பு சீசனில் சென்னை அணி மோசமான தொடக்கம் கண்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்ற சென்னை அதன் பிறகு நடந்த ஆட்டங்களில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும், 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும், 25 ரன் வித்தியாசத்தில் டெல்லியிடமும் அடுத்தடுத்து தோற்றது. கடந்த 3 ஆட்டங்களிலும் 180-க்கு மேலான ரன்னை விரட்டிப்பிடிக்க முடியாமல் முடங்கியது.
சென்னை அணியில் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. மிடில் வரிசையில் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபேவும் சொதப்புகிறார். விக்கெட் கீப்பரும், போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவருமான 43 வயது டோனியின் பேட்டிங் இந்த முறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வயது அதிகரிப்பால் அவரது பேட்டிங் வேகம் குறைந்து விட்டது. இதனால் அவர் கடைசி கட்டத்தில் களத்தில் நின்றாலே வெற்றி என்ற தனது தனித்துவமான அடையாளத்தை இழந்து வருகிறார்.
கடந்த இரு ஆட்டங்களில் அவர் களத்தில் இருந்தும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியாததால் டோனி ஓய்வு பெறுவதே மேலானது என்று ரசிகர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். டோனியின் ஆக்ரோஷமற்ற ஆட்டம் சென்னை அணியின் பேட்டிங் கலவையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு எழுச்சி பெற பேட்ஸ்மேன்கள் ஒருசேர கைகோர்த்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போதிய தாக்கம் தென்படவில்லை.
வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் உள்ளூர் சூழலில் பஞ்சாப் அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்.
சென்னை: ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, பதிரானா, கலீல் அகமது,
- ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
- தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதில் எம்.எஸ்.தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காக அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதையடுத்து தோனி ஓய்வுபெற வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தோனி ஓய்வுபெற வேண்டும் என நேரடியாக தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தோனி மிகவும் நிதானமாக ஆடி வந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹைடன், "
இதுதொடர்பாக மேத்யூ ஹைடன் கூறுகையில், இந்தப் போட்டிக்குப் பிறகு தோனி வர்ணனையாளர்கள் குழுவுடன் இணைய வேண்டும். அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார். இனி அவ்வளவுதான். இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது என தெரிவித்தார்.
ஹைடனின் இந்த விமர்சனம் தோனி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 2008 ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது.
- எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி தனது ஓய்வு வதந்திகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் தோனியின் பெற்றோர் வருகை தந்திருந்தனர். இதுவரை, அதாவது (2008) ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது. இந்நிலையில் நேற்று அவர்கள் வந்திருந்ததால் தோனி தனது ஐபிஎல் லீக் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்டில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, "இல்லை, இப்போதைக்கு இல்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடுகிறேன். நான் அதை மிகவும் எளிமையாக எடுத்துக்கொள்கிறேன். நான் அதை ஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்கிறேன்.
எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது ஆகியிருக்கும். எனவே அதன் பிறகு நான் விளையாடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன. ஆனால் முடிவு செய்வது நான் அல்ல, என் உடல்தான் முடிவு செய்கிறது. எனவே, இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அதன் பிறகு பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது.
- பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
சண்டிகரில் நேற்று நடந்த 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த டெல்லி அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
மற்ற இடங்களில் தலா 2 வெற்றி பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 3-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 4-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-வது இடத்திலும் உள்ளன
தலா ஒரு வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10-வது இடத்திலும் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹாட்ரிக் தோல்வி எதிரொலியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள ரசிகர்கள் சென்னை அணி இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.