என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvDC"

    • நாளை மதியம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
    • அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 05, 2025 ஆம் தேதி) நடைபெற உள்ள "IPL 2025" கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

    எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

    அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் 23:27 மணிக்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:59 மணிக்கும் மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:44 மணிக்கும் புறப்படும்.

    புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • சென்னை இதுவரை 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகள் பெற்றுள்ளது.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    சென்னை அணியில் டேவன் கான்வே (5 அரைசதத்துடன் 458 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (3 அரைசதத்துடன் 384 ரன்கள்), ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 290 ரன்கள்), ரகானே ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே(19 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (15 விக்கெட்), பதிரானா (10 விக்கெட்) மொயீன் அலி, தீக்ஷனா, ஆகாஷ் சிங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த சீசனில் இங்கு சென்னை அணி ஆடியுள்ள 5 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி கண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

    இதேபோல, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றிகளை குவித்து எழுச்சி கண்டது.

    பேட்டிங்கில் டேவிட் வார்னர் (4 அரைசதத்துடன் 330 ரன்கள்), பில் சால்ட், மனிஷ் பாண்டேவும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மாவும் வலு சேர்க்கிறார்கள். அக்ஷர் பட்டேல் (246 ரன்கள், 7 விக்கெட்), மிட்செல் மார்ஷ் (120 ரன்கள், 9 விக்கெட்) ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக அசத்தி வருகிறார்கள்.

    உள்ளூரில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்து 'பிளே-ஆப்' சுற்றை நோக்கி தொடர்ந்து முன்னேற சென்னை அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும் என்பதால் வெற்றிக்காக எல்லா வகையிலும் டெல்லி அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, அஜிங்யா ரஹானே, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, டோனி (கேப்டன்), மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், பதிரானா, துஷர் தேஷ்பாண்டே.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:

    டேவிட் வார்னர் (கேப்டன்) பில் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசவ், அக்ஷர் பட்டேல், அமன் கான், மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

    • முதலில் ஆடிய சென்னை 167 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய டெல்லி 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே 25 ரன்கள் சேர்த்தார். ருதுராஜ் 24 ரன், அம்பதி ராயுடு 23 ரன், ரகானே 21 ரன், ஜடேஜா 21 ரன் அடித்தனர். 8-வது வீரராக களமிறங்கிய கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் சார்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் ரூசோவ் 35 ரன்னும், மனீஷ் பாண்டே 27 ரன்னும், அக்சர் படேல் 21 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் 140 இழப்புக்கு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சென்னை அணி சார்பில் பதீரனா 3 விக்கெட், தீபக் சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • சென்னை தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.
    • சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    புதுடெல்லி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 67-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


    டோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 'பிளே-ஆப்' சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க தனது கடைசி லீக்கான இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும். தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.

    • டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய சென்னை 223 ரன்களை குவித்தது.

    புதுடெல்லி:

    16-வது ஐபிஎல் தொடரில் 67-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சிவம் துபே, கான்வே ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் அடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த நிலையில், ருதுராஜ் 79 ரன்களில் அவுட் ஆனார். கான்வே 87 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. சென்னை அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் டெல்லி அணி சிக்கியது. 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடினார். வார்னர் 87 ரனனில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், டெல்லி அணி 146 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்தது.

    சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், பதீரனா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
    விசாகப்பட்டினம்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக ஸ்லோ பிட்சாக இருந்ததால், சென்னை அணிக்கு கணிசமான ரன்களை இலக்காக வைக்க டெல்லி பேட்ஸ்மேன்கள் நினைத்தனர். இதற்காக துவக்கம் முதலே அதிரடி காட்டினர். ஆனால், அவர்கள் நினைத்ததைவிட பந்து மிகவும் மெதுவாக எழுந்து, பேட்ஸ்மேன்களை கணிக்க விடாமல் திணறச் செய்தது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் 21 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஜோடியை 3-வது ஓவரில் பிரித்தார் சாஹர். அவரது துல்லிய பந்துவீச்சில் பிருத்வி ஷா எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அவர் 5 ரன்க்கள் மட்டுமே சேர்த்தார். ஷிகர் தவான் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள்  எடுத்தநிலையில், ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 37 ரன்கள்.

    பவர் பிளேவுக்கு பிறகு ரன் எடுக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அட்டகாசமான 4 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய முன்ரோ, 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களிலும், அக்சார் பட்டேல் 3 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.

    களத்தில் இருந்த ரிஷப் பந்த், ரூதர்போர்டு இருவரும், எப்படியாவது கவுரவமான ஸ்கோரை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஹர்பஜன் ஓவரில் அபாரமாக சிக்சர் அடித்தார் ரூதர்போர்டு. அதன்பின்னர், ஆப் சைடில் வீசப்பட்ட லென்த் பாலை மீண்டும் சிக்சருக்கு அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 12 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.



    அடுத்த ஓவரில் ரிஷப் பந்த் தனது பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 116  ஆனது. அடுத்து களமிறங்கிய கீமோ பால், 3 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ பந்தில் கிளீன் போல்டானார். 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை தட்டிவிட்டு 6 ரன்கள் ஓடி எடுத்த ரிஷப் பந்த், 4வது பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிரென்ட் போல்ட், ஜடேஜா வீசிய கடைசி ஓவரில், 2வது பந்தில் தன் முழு பலத்தையும் காட்டி சிக்சர் அடித்தார். ஆனால், அடுத்த பந்தில் போல்டானார். பின்னர் வந்த இஷாந்த் சர்மா, 5வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்சரும் அடிக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் சேர்த்தது.

    சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர்,  சர்துல் தாகூர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இம்ரான் தாகிர் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளிசிஸ்சும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். டு பிளிசிஸ் 50 ரன் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேபோல் வாட்சனும் 50 ரன் இருக்கும்போது கேட்ச் ஆனார். அப்போது ஸ்கோர் 109 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ரெய்னாவும், ராயுடுவும் ஜோடி சேர்ந்து ஆடினர். ரெய்னா 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக வந்த டோனி 9 ரன்னில் வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100 வது வெற்றியை பதிவு செய்தது. 
    ×