search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvsPBKS"

    • பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்தார்.
    • ஷர்துல் தாக்கூர், கிளீசன், ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரோசோ 23 பந்துகளில் 43 ரன்களை அடித்து அவுட் ஆனார்.

    பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் ஷர்துல் தாக்கூர், கிளீசன் மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார்.
    • எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

    இதன் காரணமாக சென்னை அணி போட்டி முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களை குவித்தார்.
    • பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 10-ஆவது போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் சென்னை அணி பத்து போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது. தொடர்ச்சியாக டாஸ்-இல் தோல்வியை தழுவி வருவது தொடர்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களின் அணி வீரர்களில் பெரும்பாலானோர், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் ஆட தயாராகி விட்டனர்," என்று தெரிவித்தார். 

    • சென்னை அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் சென்னை அணி ஒரே முறை தான் டாஸ் வென்றிருக்கிறது. டாஸ்-இல் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து இருந்தார்.

    டாஸ் வெற்றி பெற பயிற்சி எடுத்தும், சென்னை அணி இன்றைய போட்டியிலும் டாஸ்-இல் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக சென்னை அணி டாஸ்-இல் தோல்வியை தழுவி வருகிறது.

    • பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடி 42 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார்.
    • லியாம் லிவிங்ஸ்டோன்- சாம் கர்ரன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய துவக்க வீரர் தேவன் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 28 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடி 42 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். அதர்வா 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

    அதன்பின் லியாம் லிவிங்ஸ்டோன்- சாம் கர்ரன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர். அதிரடி காட்டிய விங்ஸ்டோன் 4 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்னும், சாம் கர்ரன் 20 பந்துகளில் 29 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்தது. அவர்களைத் தொடர்ந்து இணைந்த ஜிதேஷ் சர்மா, ஷாரூக் கான் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. ஜிதேஷ் சர்மா 21 ரன்கள் சேர்த்தார். 

    வெற்றியைக் கொண்டாடிய சிக்கந்தர் ரசா
    வெற்றியைக் கொண்டாடிய சிக்கந்தர் ரசா

    கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது. முதல் பந்தில் சிக்கந்தர் ரசா ஒரு ரன், இரண்டாவது பந்து லெக் பை என இரண்டு ரன்களே கிடைத்தது. மூன்றாவது பந்தில் ரன் இல்லை. நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் சிக்கந்தர் ரசா தலா 2 ரன் அடித்தார். இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், சரியாக 3 ரன் எடுத்தார் சிக்கந்தர் ரசா. இதனால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. 

    • அபாரமாக ஆடிய துவக்க வீரர் தேவன் கான்வே 92 ரன்கள் விளாசினார்.
    • 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

    அபாரமாக ஆடிய துவக்க வீரர் தேவன் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்கள், ஷிவம் துபே 28 ரன்கள், மொயீன் அலி 10 ரன்கள், ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் டோனி தனக்கே உரித்தான பாணியில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் 4 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 13 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார்.

    பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ராகுல் சாகர், சிக்கந்தர் ரசா, சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

    ×