search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "customs duty"

    • பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.
    • ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்றது. நேற்று இரவு 9 .20 மணியளவில் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடக்க முயன்ற போது சுங்கவரி செலுத்தாததால் விழுப்புரம் நோக்கி செல்லவிடாமல் அந்தபஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் தவித்தனர்.

    மேலும் பஸ்சில் வந்த பயணிகள் விழுப்புரம் ெரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டம் நோக்கி செல்லும் ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு இரவு 10.05 மணிக்கு விழுப்புரம் நோக்கி சென்ற வேறு அரசு பஸ்சில் பயணிகள் ஏறி சென்றனர்.இதனால் டோல் பிளாசா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஆட்சிமன்றகுழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசுகையில்:-

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2 நூலக கட்டிடங்கள் புதுப்பித்தல் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களிலும் 2021-2022-ம் ஆண்டிற்கு 287 நூலக கட்டிடங்களை புனரமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    கூட்டத்தில் போளூர் எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், போளூர் ரெயில்வே மேம்பால பணிக்கு வருவாய்த் துறையினர் நிலத்தை உடனடியாக ஆர்ஜிதம் செய்து ரெயில்வே துறையிடம் ஒப்படைக்காத காரணத்தால் இப்பணி தாமதமாக நடைபெற்ற வருகின்றது.

    இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு உடனடியாக கலெக்டர் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இனாம்காரியந்தல், கண்ணமங்கலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கவரி கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தி அதனை எடுக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஆவணியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டு அதற்கான பில் தொகையை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டப்பணிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்யும் போது சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் தகவல் தொிவிக்க வேண்டம். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேவூர்.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், ஊரக வளர்ச்சி செயற்பொறியார் ராமகிருஷ்ணன், ஒன்றியக்கு ழுத்தலைவர்கள், பேரூராட்சித்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFlood #GST #CustomsDuty
    புதுடெல்லி:

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரூ.100 கோடியும் நிதி உதவி அறிவித்தனர். இந்த ரூ.600 கோடி நிதியை கேரள அரசுக்கு நேற்று மத்திய அரசு விடுவித்தது. இத்தகவலை மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.



    மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல், திருச்சூர், பாலக்காடு, கொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் 26-ந் தேதி வரை, கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.  #KeralaFlood #GST #CustomsDuty  #tamilnews
    ×