என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CWC23"
- முக்கிய போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்ததாக ரசிகர்கள் ஆதங்கம்
- அனைத்து போட்டிகளுக்குமான பொது டிக்கெட் விற்பனை என பிசிசிஐ தகவல்
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது.
டிக்கெட் விற்பனை தொடங்கியதும் பெரும்பாலான போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்தன. பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஆன்லைன் விற்பனை இணைய தளம் மீது குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் அனைத்து போட்டிக்கான 2-ம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இன்று முதல் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. https://tickets.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.
அரையிறுதி, இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்து உரிய நேரத்தில் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் பேரார்வம், பங்களிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஐந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. அதேபோல் பெங்களூரு, டெல்லியில் நடைபெறும் போட்டிகளுக்கான விக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
- ஏழு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்
- ஆடம் ஜம்பா, அகர் ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக இடம் பிடிப்பு
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகின்றன. நேற்று இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது.
கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுகிறார். ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆல்ரவுண்டர்), மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன் (ஆல்ரவுண்டர்), சீன் அப்போட் ஆகிய ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன் உடன் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஆடம் ஜம்பா, ஆஷ்டோன் அகர் ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். கிளென் மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவார்.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கம்மின்ஸ், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஆலேக்ஸ் கேரி, 4. ஜோஸ் இங்கிலிஸ், 5. சீன் அப்போட், 6. ஆஸ்டோன் அகர், 7. கேமரூன் க்ரீன், 8. ஜோஷ் ஹேசில்வுட், 9. டிராவிஸ் ஹெட், 10. மிட்செல் மார்ஷ், 11. மேக்ஸ்வெல், 12. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 13. டேவிட் வார்னர், 14. ஆடம் ஜம்பா, 15. மிட்செல் ஸ்டார்க்.
- உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று இந்தியா அறிவித்தது.
- அக்டோபர் 7-ந் தேதி தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.
உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று இந்தியா அறிவித்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியும் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது.
அக்டோபர் 7-ந் தேதி தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது.
தென்னாப்பிரிக்கா அணி:
1. டெம்பா பவுமா (கேப்டன்) 2. ஜெரால்ட் கோட்ஸி 3. குயின்டன் டி காக் 4. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 5. மார்கோ ஜான்சன் 6. ஹென்ரிச் கிளாசென் 7. சிசண்டா மகலா 8.கேசவ் மஹராஜ் 9. ஐடன் மார்க்ரம் 10. டேவிட் மில்லர் 11. லுங்கி என்கிடி 12. அன்ரிச் நார்ட்ஜே 13. தப்ராஸ் ரபஹாம் 14. டாகிசோ ரபஹாம் 15. ராஸ்ஸி வான் டெர் டுசென்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்