search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CWG 2022"

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா 61 பதக்கங்கள் வென்றது.
    • குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரின் பிரதமரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.

    புதுடெல்லி:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்துச் சென்றனர்.

    இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று விருந்தளிக்க உள்ளார். பிரதமர் மோடி காலை 11:00 மணிக்கு பதக்கம் வென்ற வீரர்களைச் சந்திக்கிறார்.

    காமன்வெல்த் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவுடன் பேட்டியளித்த இந்திய வீராங்கனை நிகாத் சரின், பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது குத்துச்சண்டை கையுறையில் பிரதமரிடம் ஆட்டோகிராப் வாங்குவேன் என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • காமன்வெல்த்தின் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது.
    • இதில் நியூசிலாந்தை ஷூட் அவுட் முறையில் 2-1 என இந்தியா வீழ்த்தி வெண்கலம் வென்றது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், மகளிருக்கான ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி - நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது. இதில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தது.

    இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து இருந்தன.
    • பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்தது.

    இண்டாவது பாதி ஆட்டத்தின்போது இந்திய மகளிர் அணி பதில் கோல் அடித்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் இருந்தன. வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறது.

    • உயரம் தாண்டுதலில் தேஜஸ்வி சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வி சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பார்படோஸ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் மோதியது. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற இலக்குடன் பார்படோஸ் அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசி விக்கெட்களை கைப்பற்றினர். இறுதியில் பார்படோஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் 3 போட்டியில் இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளது.

    • பளு தூக்குதல் பிரிவில் குர்தீப் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங், மொத்தம் 390 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் லவ்பிரீத் சீங், மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்த பிரிவில் கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். சமோவா நாட்டின் ஜேக் ஓபலாக் 358 கிலோ எடை தூக்கி வெற்றிப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
    • டேபிள் டென்னிசில் நைஜீரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    முதல் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் - சத்யன் ஞானசேகரன் ஜோடி 11 - 6, 11 - 7, 11 - 7 என்ற கணக்கில் நைஜீரியா ஜோடியை

    இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 11 - 9, 4 - 11, 11 - 6, 11 - 8 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    • காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டி நடைபெற்றது.
    • இதில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு குழு ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    முதல் சுற்றில் ஆடிய சும்த் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-9, 21-11 என்ற கணக்கில் வென்றது.

    2வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-5, 21-6 என்ற கணக்கில் வென்றார்.

    இதையடுத்து, 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்ற பிறகு, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இதன்மூலம் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
    • ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • சிங்கப்பூர் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
    • ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியா வெற்றி.

     பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை 11-5, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல், சிங்கப்பூர் வீரர் பாங்க் யெவ் என் கோயனை, 11-8, 11-9 11-9 என்ற செட்களில் வீழ்த்தி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், சிங்கப்பூரின் கிளாரன்ஸ் செவ் சே யூவை 11-7, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ×