என் மலர்
நீங்கள் தேடியது "Cylinder Burst"
- மதுரையில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்தது.
- பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை சுப்பிரமணிய புரம், 3-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
பேக்கரி ஊழியர்கள் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதேபோன்று கோமதி புரம், பாரதி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் குமார் என்பவர் அங்கு வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார். மதிய உணவு விருந்துக்கு, அப்பளம் பொறித்து கொண்டிருந்தனர். சிலிண்டரின் ரெகு லேட்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.
மதுரையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடையில் தீப்பற்றிய நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் பல சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன.
- பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பேலா நகரில் சந்தை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.
இந்தநிலையில் நேற்று இந்த சந்தை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.
இதில் கடையில் தீப்பற்றிய நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் பல சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அதோடு சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டஜனுக்கும் அதிகமான வாகனங்களும் தீக்கிரையாகின. இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
- குடும்பத்தினர் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களை வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
- அந்த நேரத்தில் சண்முகசுந்தரம் வீட்டின் வெளியே அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திண்டிவனம் ரொட்டிக்கார தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். அவரது மகன் சந்தோஷ். இவர் பெருமாள் கோவில் எதிரில் முட்டைக்கடை வைத்துள்ளார்.இவரது குடும்பத்தினர் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களை வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, மின் வயர்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இதனால் சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டரும் எரிந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் சண்முகசுந்தரம் வீட்டின் வெளியே அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த சுமார் 4 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.