என் மலர்
நீங்கள் தேடியது "D Gukesh"
- 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன்.
- உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா வீரரை எதிர்கொள்ள இருக்கிறார்.
பிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் தலா 8 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 5 பேர் கலந்து கொண்டனர்.
ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறுபவர் உலக சாம்பியனுடன் மோதுவார்.
14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 14-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது.
சென்னையை சேர்ந்த 17 வயதான கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த தொடரில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். கடைசி சுற்றில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர் கொண்டார்.
கறுப்பு நிற காய்களுடன் குகேஷ் விளையாடினார். 71-வது காய் நகர்த்தலுக்கு பிறகு போட்டி 'டிரா'வில் முடிந்தது. அவருக்கு அடுத்த நிலையில் இருந்த பேபியானோ காருனா (அமெரிக்கா)- இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) ஆகியோர் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.
இதனால் குகேஷ் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் மொத்தமுள்ள 14 சுற்றுகளில் குகேஷ் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 8 ஆட்டங்களில் 'டிரா' செய்தார். ஒரே ஒரு சுற்றில் மட்டும் தோல்வியை தழுவினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற புதிய வரலாற்றை குகேஷ் படைத்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் குகேஷ் பெற்றார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று இருந்தார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்காக சீனாவை சேர்ந்த டிங்லிரனுடன் மோதுகிறார்.
உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாட உள்ள இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு கேரி காஸ்பரோயு (ரஷியா) 22-வது வயதில் உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாடியதே சாதனையாக இருந்தது. அதை குகேஷ் முறியடித்து உள்ளார்.
டிங்லிரன்-குகேஷ் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டிக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் போட்டி நடைபெறலாம் என்று தெரிகிறது.
மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 14-வது சுற்றில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி பிரான்சை சேர்ந்த பிரவுசியாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.
ஹிகாரு நகமுரா 8.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இயன் நெபோம்னியாச்சி 8.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், பேபியானோ 8.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், விதித் குஜராத்தி 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்தனர். பிரவுசியா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அப்சோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலி கடைசி சுற்றில் ரஷிய வீராங்கனை கத்ரினா லாங்கோவை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பியும் கடைசி சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹம்பி 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், வைஷாலி 7.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர். சீன வீராங்கனை டான்ஜோங்கி 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் அவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கு மோதுகிறார்.
- FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம்வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள்.
சென்னை :
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்ட குகேஷ், அதில் டிரா செய்து 14 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவரும் பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம்வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
Congratulations to @DGukesh on an incredible achievement! ?
— M.K.Stalin (@mkstalin) April 22, 2024
At just 17 years old, he's made history as the youngest-ever challenger in the #FIDECandidates and the first teenager to claim victory.
Best of luck in the battle ahead against Ding Liren for the World Chess… https://t.co/L2SEfj4yw6 pic.twitter.com/T70gM66PPX
- கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.
- 17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறது.
செஸ் போட்டியில் உலக சாம்பியனுடன் விளையாடப்போகும் வீரரைத் தேர்வு செய்யும் கேண்டிடேட்ஸ் செஸ் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய நாட்டின் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.
17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
- கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் மகிழ்ச்சி.
புடாபெஸ்ட்:
அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஷாத்பி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.
11 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் ஓபன் பிரிவில் 21 புள்ளிகள் எடுத்தது. 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு சுற்று 'டிரா' ஆனது. தோல்வி எதையும் சந்திக்கவில்லை.
பெண்கள் பிரிவில் 19 புள்ளிகள் கிடைத்தது. 9 வெள்ளி பெற்றது. ஒரு சுற்றில் 'டிரா' செய்தது. ஒரு சுற்றில் தோல்வியை தழுவியது.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2021) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.
ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வெல்ல சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 2 சுற்றில் 'டிரா' செய்தார். தங்கம் வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-
எனது ஆட்டத்தில் மிகுந்த முன்னேற்றத்தை காணமுடிந்தது. மேலும் அணியாக நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியான உணர்வை தருகிறது.
கடந்த காலங்களில் பல மோசமான தோல்விகளை தழுவி இருந்த போதிலும் இந்த முறை ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்ல முடிந்தது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கடைசி சுற்றில் தோற்றாலும் டை பிரேக்கில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். நிச்சயமாக போட்டியில் வெல்வதே விரும்பினேன். அதன்படி கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் நிம்மதி அடைந்தோம். கடந்த முறை தங்கம் வெல்லும் அணியாக நெருங்கி வந்து வாய்ப்பை இழந்தோம். இந்த முறை வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளித்தது.
உலக செஸ் சாம்பியன் போட்டி பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. செஸ் ஒலிம்பியாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
- முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும்.
முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது,6-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ளது. குகேஷ்-டிங் லிரென் மோதும் 7-வது சுற்று போட்டி நாளை நடக்கிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்று முன்னிலை பெறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
- பரபரப்பான 12-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் தோல்வியடைந்தார்.
11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார். At the end of 11 rounds, Gukesh was leading by a score of 6 - 5.இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் 12-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கடந்த சுற்றில் வெற்றிபெற்று குகேஷ் முன்னிலை வகிக்க, இந்த சுற்றில் டிங் வெற்றியால் கூடுதல் ஒரு புள்ளி பெற்றதன் மூலம் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
தற்போது 2 சுற்று ஆட்டங்களே எஞ்சியிருப்பதால் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
- 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர்.
- நாளை 14-வது சுற்று ஆட்டம் நடைபெறும்.
சிங்கப்பூர்:
தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.
இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று 13-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடினார். பரபரப்பாக சென்ற இந்த சுற்று கடைசியில் டிராவில் முடிந்தது.
நாளை 14-வது சுற்று ஆட்டம் நடைபெறும். இந்த சுற்றும் ஒரு வேளை டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை தரப்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், குகேஷ் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

நாளை தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னை கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடந்தது.
- குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
சென்னை:
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்று முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7.5 புள்ளிகள் எடுத்து சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சென்னையைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன், இந்தப் பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதையடுத்து, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் செஸ் வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
அப்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று தெரிவித்தார்.
- டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
- ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன்.
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷ், சமீபத்தில் உலக சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அப்போது குகேஷ் கூறியதாவது:-
ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன். குறிப்பாக இந்தியாவில் ஒலிம்பிக் நடக்கும்பட்சத்தில் செஸ் சேர்க்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
செஸ், மிகவும் பிரபலத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறது என்று நான் நினைக்கிறேன். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதை ஒலிம்பிக் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதனால் ஒலிம்பிக்கில் செஸ் சேர்க்கப்படுவதை உண்மையிலேயே எதிர்நோக்குகிறேன்.
ஓரிரு நாட்களில் நெதர்லாந்தில் உள்ள விஜ்க் ஆன் ஜீயில் நடைபெறும் டாடா செஸ் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
- வைஷாலி 5 புள்ளியுடன் 8-வது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 2 புள்ளியுடன் 13-வது இடத்திலும் உள்ளனர்.
- பிரக்ஞானந்தா 5.5 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 9-வது சுற்று நடைபெற்றது.
உலக சாம்பியனான சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் சகநாட்டை சேர்ந்த மென்டோன்காவுடன் மோதினார். 43-வது காய் நகர்த்தலுக்கு பிறகு குகேஷ் வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில் மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். அவரை நெதர்லாந்தை சேர்ந்த அனிஷ் கிரி தோற்கடித்தார். இதேபோல ஹரி கிருஷ்ணா, ரஷிய வீரர் விளாடிமிர் வாசிலியேச்சிடம் தோற்றார். அர்ஜூன் எரிகேசி இந்த சுற்றில் சீன வீரருடன் டிரா செய்தார்.
9-வது சுற்று முடிவில் குகேஷ் மட்டும் 6.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்து சாட்டோரோவ் மற்றும் விளாடிமிர் தலா 6 புள்ளிகளுடன் உள்ளனர்.
பிரக்ஞானந்தா 5.5 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார். ஹரி கிருஷ்ணா 4 புள்ளியும், அர்ஜூன் எரிகேசி மென்டோன்கா தலா 2.5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த வைஷாலி 9-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக்குடன் 'டிரா' செய்தார்.
வைஷாலி 5 புள்ளியுடன் 8-வது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 2 புள்ளியுடன் 13-வது இடத்திலும் உள்ளனர்.
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.
- 10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விஜ்க் ஆன் ஜீ:
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 10-வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் உலக சாம்பியனான சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளூரைச் சேர்ந்த மேக்ஸ் வார்மெர்டமை எதிர்கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார்.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சுலோவெனியாவைச் சேர்ந்த விளாடிமிர் பெடோசிவை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி, மென் டோன்கா ஆகியோர் தாங்கள் மோதிய ஆட்டங்களில் டிரா செய்தனர்.
உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் செர்பிய வீரர் அலெக்சி ஷாரனாவை வீழ்த்தினார்.
10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 5 சுற்றுகளில் டிரா செய்தார். இன்னும் 3 ரவுண்டு எஞ்சியுள்ளது.
நோடிர்பெக் அப்து சாட்டோரோவ் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ஹரிகிருஷ்ணா 4.5 புள்ளியும், எரிகேசி , மெண்டோன்கா தலா 3 புள்ளியும் பெற்றுள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி ஆர்.வைஷாலி 10-வது சுற்றில் செக் குடியரசுவைச் சேர்ந்த வான் நூயனிடம் தோற்றார். அவர் 5 புள்ளியுடன் 10-வது இடத்தில் உள்ளார்.