என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று தமிழக வீரர் குகேஷ் சாதனை
- 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன்.
- உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா வீரரை எதிர்கொள்ள இருக்கிறார்.
பிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் தலா 8 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 5 பேர் கலந்து கொண்டனர்.
ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறுபவர் உலக சாம்பியனுடன் மோதுவார்.
14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 14-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது.
சென்னையை சேர்ந்த 17 வயதான கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த தொடரில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். கடைசி சுற்றில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர் கொண்டார்.
கறுப்பு நிற காய்களுடன் குகேஷ் விளையாடினார். 71-வது காய் நகர்த்தலுக்கு பிறகு போட்டி 'டிரா'வில் முடிந்தது. அவருக்கு அடுத்த நிலையில் இருந்த பேபியானோ காருனா (அமெரிக்கா)- இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) ஆகியோர் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.
இதனால் குகேஷ் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் மொத்தமுள்ள 14 சுற்றுகளில் குகேஷ் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 8 ஆட்டங்களில் 'டிரா' செய்தார். ஒரே ஒரு சுற்றில் மட்டும் தோல்வியை தழுவினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற புதிய வரலாற்றை குகேஷ் படைத்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் குகேஷ் பெற்றார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று இருந்தார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்காக சீனாவை சேர்ந்த டிங்லிரனுடன் மோதுகிறார்.
உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாட உள்ள இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு கேரி காஸ்பரோயு (ரஷியா) 22-வது வயதில் உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாடியதே சாதனையாக இருந்தது. அதை குகேஷ் முறியடித்து உள்ளார்.
டிங்லிரன்-குகேஷ் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டிக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் போட்டி நடைபெறலாம் என்று தெரிகிறது.
மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 14-வது சுற்றில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி பிரான்சை சேர்ந்த பிரவுசியாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.
ஹிகாரு நகமுரா 8.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இயன் நெபோம்னியாச்சி 8.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், பேபியானோ 8.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், விதித் குஜராத்தி 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்தனர். பிரவுசியா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அப்சோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலி கடைசி சுற்றில் ரஷிய வீராங்கனை கத்ரினா லாங்கோவை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பியும் கடைசி சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹம்பி 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், வைஷாலி 7.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர். சீன வீராங்கனை டான்ஜோங்கி 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் அவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கு மோதுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்