search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dairy cows"

    • கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி நோயானது அம்மை காய்ச்சலாகும்.
    • நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    குடிமங்கலம்:

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு லம்பி எனும் புதிய வகை வைரஸ் நோய் தொற்று பரவி வருகிறது.கடந்த சில மாதங்களில் ஆடுகளுக்கு மர்மக்காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது கறவை மாடுகளுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:-

    கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி நோயானது அம்மை காய்ச்சலாகும். கொசு, ஈ மற்றும் உண்ணிகள் வாயிலாக இந்நோய் பரவுகிறது. இந்நோய் பாதித்தால் கால்நடைகளுக்கு உடலில் கட்டிகள் ஏற்படும். தாய் பசுவிடம் இருந்து பால் குடித்தால் கன்றுகளுக்கும் பரவும் தன்மை கொண்டது.நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • ஒரு பயனாளிக்கு ரூ.50,000 வீதம், 100 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
    • 2 கறவை மாடு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.5,000- க்கு மேல் அதிக லாபம் கிடைக்கின்றது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட காவலா குறிச்சி ஊராட்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு கறவை மாடுகள் வாங்குவதற்காக ஒரு பயனாளிக்கு ரூ.50,000 வீதம், 100 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கும் திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக விடியல் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையக தொகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு கறவை மாடுகளின் மூலம் உற்பத்தியாகும் பாலினை ரூ.35-க்கு நேரடியாக கொள்முதல் செய்து, அதிலிருந்து கிடைக்கும் லாபமானது மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக 2 கறவை மாடு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.5,000- க்கு மேல் அதிக லாபம் கிடைக்கின்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர், திலகராஜ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், காவலாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர், மாலதி சுரேஷ், ஆலங்குளம் கனரா வங்கி மேலாளர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.
    • கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் பலர் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததால் பால் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர்.விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. பூச்சி மருந்து, உரம் விலையும், தொழிலாளர்களுக்கான கூலியும் உயர்ந்து விட்டது.நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

    விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.கூடுதல் வருமானத்திற்காக பெரும்பாலான தோட்டங்களில் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தி கட்டுப்படியாவதில்லை என்கின்றனர் விவசாயிகள்.

    தமிழக அரசு 4.3 சதவீத கொழுப்பு சத்தும், 8.2 சதவீத புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய் தான் கிடைக்கிறது.கலப்பு தீவனம் கிலோ 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    இத்துடன் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது.தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் பலரும் கறவை மாடுகளை விற்கும் நிலை ஏற்பட்டு விடும் என்கின்றனர் விவசாயிகள்.

    ×