என் மலர்
நீங்கள் தேடியது "David Lloyd"
- 2007-க்குப் பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
- இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
2007-க்குப் பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்வியை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்தியா அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய அணியாக இல்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.
இது அவர் கூடியதாவது:-
இந்தியா கணிக்கக்கூடிய அணியாகும். இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஆம் அவர்கள் நல்ல வீரர்கள். ஆனால் அவர்கள் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் ரிஸ்க் எடுத்து விளையாட தயாராக இல்லை. அவர்கள் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பவர்களாக இல்லை.
என்று டேவிட் லாய்ட் கூறினார்.
- 95 சதவீத மக்கள் சச்சின் சிறந்தவர் என்று சொல்கின்றனர்.
- உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
லண்டன்:
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது வாசிம் அக்ரம் கிளென் மெக்ராத், அக்தர், போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்டார். அந்த வகையில் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்.
அவர் 30000-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 100 சதங்கள் விளாசி இந்தியாவின் பல மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மறுபுறம் 2008-ல் அறிமுகமான விராட் கோலியும் கிட்டத்தட்ட சச்சின் போலவே நவீன கிரிக்கெட்டில் உலகின் டாப் பவுலர்களுக்கு சவாலை கொடுத்து இதுவரை 26000+ ரன்கள் 80 சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் சில சமயங்களில் சச்சினை விட விராட் கோலிதான் சிறந்தவர் என்று ரசிகர்கள் கூறுவது வழக்கமாகும்.
இந்நிலையில் சச்சினை விட பிரையன் லாரா சிறந்த பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரான டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்களில் நான் செய்த ஒரு ஆராய்ச்சியை இங்கே சொல்கிறேன். இங்கே 95 சதவீத மக்கள் சச்சின் சிறந்தவர் என்று சொல்கின்றனர். சச்சின் தன் ஈகோவை வீட்டிலேயே விட்டு விடுவார். மறுபுறம் விராட் கோலி மிகவும் ஆளுமை மிக்க வீரர் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அற்புதமானவர். விராட் கோலி ஆபத்தானவர்.
ஒருவேளை சச்சின் மற்றும் லாரா ஆகியோரில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் நான் லாராவை தேர்ந்தெடுப்பேன். கண்டுபிடிக்கப்படாத இடங்களில் கூட பந்தை அடிக்கக்கூடிய லாரா எல்லாவற்றையும் இயல்பாக செய்யக்கூடியவர். இருப்பினும் அதை நான் சச்சினிடம் பார்த்ததில்லை. சச்சின் எப்போதும் சமநிலையில் இருப்பார்.
டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும் அவரும் அற்புதமான வீரர்கள். உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சச்சின் உன்னதமானவர். அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று பார்க்கும்போது விராட் கோலி சிறந்தவர்.
என்று கூறினார்.