என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death For Child Rapists"

    • கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வந்த ரமேஷ் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
    • பொக்சோ வழக்கில் ரமேஷ் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

    நர்சிங்கர் நகரில் உள்ள அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள ஒரு குடிசையில் வசித்து வந்த சிறுமி, பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போனாள். மறுநாள் ஒரு காட்டில் பலத்த காயமடைந்த நிலையில் அவள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    நரசிங்கர் துணைப்பிரிவு காவல் அதிகாரி உபேந்திர பாட்டி கூறுகையில், சிறுமிக்கு அதிக இரத்தபோக்கு ஏற்பட்டிருந்தது. முதலில் நரசிங்கரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கும் சிறுமி கொண்டுசெல்லப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தாள்.

    இதனையடுத்து அப்பகுதியில் 46 இடங்களில் உள்ள 136 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் ரமேஷ் சிங் என்ற நபர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்று தெரிந்ததை கண்டுபிடித்தனர்.

    ரமேஷ் சிங் என்பவர் கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வருவதை அறிந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ரமேஷ் சிங்கின் பின்னணியை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    2003 ஆம் ஆண்டு ஷாஜாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

    பின்னர் 2013 ல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ரமேஷ் சிங், 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைக் கடத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

    இதனையடுத்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த கையேடு வெளியே வந்த ரமேஷ் சிங் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    12 வயதுக்கு உள்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #DeathForChildRapists #POCSO #MonsoonSession
    புதுடெல்லி:

    கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. 

    இதனை அடுத்து, பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த அவசர சட்டம் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அமலுக்கு வந்தது. 

    இந்த அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 

    இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று இந்த சட்ட மசோதாவை உள்துறை இணை மந்திரி கிரண் ரெஜிஜு தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின்னர் இந்த நிரந்தர சட்டம் அமலாகும்.

    இந்த சட்ட மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம். 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக யார் மீதும் குற்றம் சுமத்தப்பட்டால் அந்த வழக்குகள் 2 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

    12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது. 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் அளிக்கப்படாது. 

    16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கின் தண்மைக்கேற்ப குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. #DeathForChildRapists #POCSO 
    12 வயதுக்கு உள்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் நிரந்தர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #DeathForChildRapists #POCSO
    புதுடெல்லி:

    கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. 

    இதனை அடுத்து, பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் இந்த அவசர சட்டம் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அமலுக்கு வந்தது. 

    இந்த அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும். 

    ×