என் மலர்
நீங்கள் தேடியது "death woman"
விருதுநகர்:
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி மின்வாரிய காலனியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது53), தனியார் நிறுவன காவலாளி.
இவரது மனைவி முத்துலட்சுமி (45). இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 23-ந்தேதியும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
மனைவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை கண்ட காளியப்பன் பயந்து விட்டார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் விஷம் குடித்து மயங்கினார்.
கணவன்-மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துலட்சுமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையில் விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். முத்துலட்சுமி இறந்ததை தொடர்ந்து பாண்டியன் நகர் போலீசார் காளியப்பன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மானோஜிபட்டி அருகே உள்ள அய்யன் திருவள்ளுவர் நகரைச் சேரந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி முத்துமாரி (வயது 40). மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இந்தநிலையில் நேற்று முத்துமாரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மண்எண்ணெய்யை எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.