என் மலர்
நீங்கள் தேடியது "deed registration office"
- பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
- 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள்.
பத்திரப் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
தற்போது பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17-ந் தேதி (நாளை) அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.
அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோபிசெட்டிபாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
- இது குறித்து சார்பதிவாளர் தமிழ்செல்வி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் தமிழ்செல்வி (56).
இவர் நேற்று பணியில் இருந்த போது பா.ஜனதாவை சேர்ந்த அரவிந்த்பாலாஜி, புவனா,விஜயலட்சுமி, லீலா மணி, நந்தகுமார் உள்பட 12 பேர் அத்துமீறி அலுவலகத்துக்கள் நுழைந்து பெரியாரின் படம் இந்த அலுவலகத்தில் உள்ளது.
ஏன்பிரதமர் மோடியின் படம் வைக்கவில்லை என்றும், பெரியார் படத்தை கழற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கு சார் பதிவாளர் தமிழ் செல்வி உயர்அதிகாரிகளிடம் பேசு கொள்ளுங்கள், பத்திர பதிவுக்காக டோக்கன் போட்ட பொதுமக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.
அதற்கு பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சார்பதிவாளர் தமிழ்செல்வி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் பா.ஜனதாவை சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.