search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Civic Body"

    • அபராத தொகையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க வலியுறுத்தல்.
    • மேற்கு மண்டலத்தில் மட்டும் 380 பேருக்கு டெங்கு காய்ச்சல்.

    கொசுக்களால் பரவும் நோய்கள் கணிசமான அளவில் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இதுதொடர்பான விசாரணையின் போது கடந்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் ஏன் அதிகரித்தது என்பதை விளக்கும் அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொசு பரவலுக்கு காரணமாக இருப்போருக்கு அபராத தொகையை ரூ. 500-இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்கவும் வலியுறுத்தி உள்ளது.

    வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராஜத் அனேஜா, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் டெங்கு காய்ச்சல் பரவல் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கு மண்டலத்தில் மட்டும் 380 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்ற விவரங்களை மாநகராட்சி வழங்குவதில்லை என்று தெரிவித்தார்.

    "இரண்டு வாரங்களில் அனைத்து விவரங்களும் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த அறிக்கையில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்ததற்கான காரணங்களை விளக்கமாக குறிப்பிட வேண்டும்," என்று நீதிபதி மன்மீட் பி.எஸ். அரோரா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. 

    ×