search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi high court"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன் மீது போக்சோ பதியப்பட்டதை எதிர்த்து பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.
    • ஆண், பெண் வேறுபாடின்றி போக்சோ சட்டம் பதியலாம்.

    இந்தியாவில் பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறத்தல்களில் ஈடுபடும் பட்சத்தில் பாலின பாகுபாடின்றி பெண்கள் மீதும் இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முயும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

    "குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் போக்சோ. இதில் சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் மீது பாலின பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்தின் மூன்றாவது பிரிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் "நபர்" என்ற வார்த்தை ஆணை மட்டும் தான் குறிக்கும் என்று ஏன் புரிந்து கொள்ளப்படுகிறது?"

     


    "போக்சோ சட்டத்தின் மூன்று மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டு இருப்பவை கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவது பாலின வேறுபாடு இன்றி குற்றம் என்பதையே குறிக்கிறது."

    "பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்சோ சட்டம் இயற்றப்பட்டது என்பதை கவனத்தில் கொண்டு- ஒரு குழந்தை மீது ஆண் அல்லது பெண் குற்றம் செய்தாலும் - நீதிமன்றம் சட்டமியற்றும் நோக்கத்தையும், சட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் எந்த விதியையும் விலக்கக்கூடாது."

    "இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வகையில் ஏதேனும் பொருள் அல்லது உடல் உறுப்பை உள்நுழைத்தல் ஆகியவற்றை குறிக்கிறது. அந்த வகையில், இது ஆணுறுப்பை மட்டுமே குறிக்கும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது," என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி தெரிவித்தார்.

    கடந்த வாரம் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில், பெண் ஒருவர் தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை எதிர்த்து வாதிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது தான், நீதிபதி இந்த கருத்தை தெரிவித்து போக்சோ வழக்கை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த பெண் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், போக்சோ வழக்கை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவையும் ரத்து செய்தார்.

    • யுபிஎஸ்சி ஜூலை 31-ந்தேதி பூஜா கெத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது.
    • விசாரணைக்காக கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளதால் முன்ஜாமின் கேட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.

    புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர், பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு ஓபிசி மற்றும் உடல் ஊனம் வசதி பெற்றது என அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன.

    விசாரணை முடிவில் யுபிஎஸ்சி (Union Public Service Commission) பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் தேர்வு எழுத தடைவிதித்தது.

    இதற்கிடையே இந்த புகார் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார்.

    பூஜா கெத்கரின் மனு நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆகஸ்ட் 21-ந்தேதி வரை கைது செய்யாமல் இருக்க இடைக்கால பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டது. டெல்லி போலீஸ் மற்றும் யுபிஎஸ்சி ஆகியவற்றிற்கு இது தொடர்பாக நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

    பூஜா கெத்கர் பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. அத்துடன் இந்த வழக்கை ஆகஸ்ட் 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

    பூஜா கெத்கர் தனது பெற்றோர் பெயர்களை மாற்றி கூறியிருந்ததாகவும் யுபிஎஸ்சி தெரிவித்திருந்தது.

    ஜூலை 31-ந்தேதி யுபிஎஸ்சி பூஜா கெத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது. அத்துடன் எதிர்காலத்தில் தேர்வு எழுதுவற்கு தடைவிதித்திருந்தது.

    ஆகஸ்ட் 1-ந்தேதி செசன்ஸ் கோர்ட் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. பூஜா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அது குறித்து விசாரணை தேவைஎனத் தெரிவித்திருந்தது.

    • அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
    • விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் இருக்கும் அவரை சிபிஐ மேலும் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்த ஜாமினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் ஜாமினுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது டெல்லி மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் "நான் குழப்பம் அடைகிறேன். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?. அவரை மீண்டும் கைது செய்ய போகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

    இன்றைய விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி விவேக் குர்னானி ஆஜரானார். அவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு இன்று மற்றொரு வழக்கில் ஆஜராக இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி "அமலாக்கத்துறையின் இந்த வழக்கு முற்றிலும் துன்புறுத்தலின் ஒன்றாகும்" எனத் தெரிவித்தார்.

    பின்னர் வழக்கு விசாரணை சில மணி நேரம் ஒத்திவைத்தார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபானம், தனியார் லைசென்ஸ் பெற்று கடைகளை நடத்தலாம் என்பதுதான்.

    2022-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி தலைமை செயலாளர் நரேஷ் குமார் இந்த மதுபானக் கொள்கையில் விதிமீறல் மீறப்பட்டதை கோடிட்டு காட்டினார். மேலும் மதுபான லைசென்ஸ்க்காக மறைமுக பலன்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

    மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் மதுபான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு 12 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்பதால் அதில் ஈடுபட்டுள்ள்ளனர். இதற்கு பலனாக தெற்கு குரூப் ஆம் ஆத்மி கட்சிக்கு கிக்பேக்ஸ் என்ற முறையில் 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அதில் ஒரு பகுதியை பொது ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது என சிபிஐ குற்றம்சாட்டியது. கிக்பேக்ஸ் நடைபெற்றுள்ளதால் பணமோசடி என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    • பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை
    • பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் சமீபத்தில் சைவமாக மாறியுள்ளதகவும் மாறியதற்கான அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த வளாகத்தில் நரம்பியல் பிரச்சனை கொண்டவர்கள் தொடங்கிய கேன்டீனை திறந்து வைத்து சந்திரசூட் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், எனக்குப் பிரியங்கா, மாஹி என்ற இரண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகள் இருக்கின்றனர். நான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் எனக்கு இனஷ்பிரேஷனாக உள்ளனர்.

     

    சமீபத்தில் நான் சைவமாக மாறினேன். எனது மகள் என்னிடம் வந்து, நாம் எதற்கும் கொடுமை செய்யாத வாழ்க்கையை வாழவேண்டும் என்று கூறியதே அதற்குக் காரணமாகும் என்று தெரிவித்தார், மேலும், தானும் தனது மனைவியும் பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை என்றும் சந்திரசூட் தெரிவித்தார்.

    சந்திரசூட் - ராஷ்மி தம்பதிக்கு அபினவ், சிந்தன் என்ற மகன்கள் உள்ள நிலையில் பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருகிறது.
    • விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

    விக்கிப்பீடியா இணையதளத்தின் மீது ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

    விக்கிப்பீடியா இணையதளத்தில் "மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருவதாகவும், போலிச் செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ANI வழங்குவதாகவும் விமர்சனங்கள் உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI வழக்கு தொடுத்துள்ளது.

    விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவிற்கு தனது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்த மனு தொடர்பாக பதிலளிக்க விக்கிப்பீடியா இணையதளத்துக்கு நோட்டிஸ் அனுப்பிய நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.

    • டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
    • கெஜ்ரிவால் ஜாமின் மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    பண மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜூன் 20-ந்தேதி அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 26-ந்தேதி சிபிஐ-யால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ந்தேதி வரை விசாரணை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

    இந்நிலையில் சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது.

    கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பயங்கரவாதி அல்ல என்றும், அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு அவரை சிபிஐ கைது செய்ததாகவும் கூறினார்.

    சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிபி சிங், ஜாமின் மனுவை முதலில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் கெஜ்ரிவால் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகியதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

    தொடர்ந்து வாதங்களை கேட்ட நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, கெஜ்ரிவால் ஜாமின் மனு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பினார். மேலும் ஜூலை 17-ந்தேதி ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
    • சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைதுசெய்தது.

    இதற்கிடையே, சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மனு குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஏற்கனவே கைதுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விசாரணை நீதிமன்றம் கடந்த 20-ந்தேதி ஜாமின் வழங்கியது.
    • ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.

    இந்த ஜாமினை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி மாநில உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தது. நீதிமன்றம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தியது.

    அப்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடைவிதித்தது. அத்துடன் விசாரணைக்கு இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்த நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான பெஞ்ச், விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு தடைவிதித்தது.

    • விசாரணை நீதிமன்றம் நேற்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
    • அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததால் ஜாமின் நிறுத்தி வைப்பு.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

    இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தள்ளார்.

    சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன்பு உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டு என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். இன்று மாலை 4 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் வெளியில் வருவதாக இருந்தது. அவருக்கு சிறந்த வரவேற்பு கொடுக்க ஆம் ஆத்மி கட்சியினர் தயாராக இருந்தனர்.

    மக்களவை தேர்தலின்போது உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார்
    • டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

    ஆம் ஆதிமி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லியின் கல்வி அமைச்சருமான அதிசி, பாஜக குறித்து அவதூறாக பேசியாத தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேரை பாஜக ரூ.25 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி அமைச்சர் அதிஷி பேசுகையில், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் பாஜக தன்னை விலைக்கு வாங்க முயன்றதாகவும், தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார். இதற்கு மறுத்தால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையை அனுப்பி கைது செய்துவிடுவோம் என்று பாஜக மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.

     

    இதைதொடர்ந்து டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அதிஷி ஊடகத்தின் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

     

    இந்நிலையில்தான் அதிஷி ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன்1 ஆம் தேதி கெஜ்ரிவாலின் ஜாமின் முடிய உள்ள நிலையில் அவரின் ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கை மனுவை உடனே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது
    • டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

    மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.




    "வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்" என டெல்லி உயர்நீதி மன்றத்தில் அந்நிறுவனம் வாதம் செய்தது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.

    இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும் என்றும் அது தனியுரிமையை மீறும் ஒரு செயல் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதம் செய்யப்பட்டது.




    ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.

    தவறான தகவல்களை பரப்புபவர்கள் , வன்முறையை தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

    • உபி.யில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாக புகார்
    • மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பிரதமர் மோடி பேசியதாக புகார்

    பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாகவும், அவரின் பேச்சு மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பேசினார்.

    ஆகவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளுக்கு மோடி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரசாரத்திற்கு அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் எனவும் அந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×