என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "delhi highcourt"
- சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
#WATCH | Delhi: Thick toxic foam seen floating on the Yamuna River in Kalindi Kunj, as pollution level in the river remains high. Earlier today, devotees were seen taking a holy dip in the river and performing rituals of #ChhathPuja, on the first day of the festival.(Drone… pic.twitter.com/XFqWFoxKFx
— ANI (@ANI) November 5, 2024
இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.
ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் பொதுமக்கள் நீராட டெல்லி அரசு தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவை நிராகரித்த நீதிமன்றம், யமுனை நதி மிகவும் மாசடைந்து இருப்பதால் அங்கு நீராடும் மக்களுக்கு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது ஆதலால் பாதுகாப்பான இடங்களில் சத் பூஜை கொண்டாடுங்கள் என்று கருத்து தெரிவித்தது.
VIDEO | Delhi: Chhath Puja devotees offer prayer in Yamuna even as a layer of toxic foam floats on the river surface. The four-day Chhath festival begins today with 'nahay khaye'. Visuals from Kalindi Kunj.#ChhathPuja #YamunaRiver (Full video available on PTI Videos -… pic.twitter.com/z33cwy97Bk
— Press Trust of India (@PTI_News) November 5, 2024
- ரோஸ் அவென்யு கோர்ட் நேற்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
- இதனால் அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று, ரோஸ் அவென்யு கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது. சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன் உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பு தங்கள் வாதங்களை முன் வைத்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன் வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. அமலாக்கத் துறையின் ஆவணங்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிசீலிக்கவில்லை. டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் ஜாமின் உத்தரவு அமைந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தவறு உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
பாராளுமன்ற தேர்தலின்போது சுப்ரீம் கோர்ட் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அவர் திகார் சிறையில் உள்ளார்.
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்ததோடு அந்த மனுவை தள்ளுபடி செய்து.
ஆனால் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்தது. இதற்கிடையே தொடர்ந்து கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் கோபம் அடைந்த டெல்லி உயர்நீதிமன்றம், "இந்த விசயத்தில் நாங்கள் ஒருமுறை உத்தரவு பிறப்பித்துவிட்டோம். அதன்பிறகு தொடர்ந்து வழக்கு தொடரக்கூடாது. அடுத்தடுத்த தொடர்ச்சிகள் இருப்பதற்கு இது ஒன்றும் ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல" என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வழக்கு, ஜாமின் மனு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
- அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜரானார்.
- டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைதுசெய்தனர். தொடர்ந்து 22-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, கெஜ்ரிவாலின் காவல் இன்றுடன் முடிந்தநிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
கோர்ட்டில் ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலிடம் மேலும் விசாரணை நடத்த ஒரு வார காலம் அவகாசம் கேட்டது அமலாக்கத்துறை. அப்போது சட்டத்தைஅ விட முதல் மந்திரி மேலானவர் இல்லை என வாதமிட்டது. இதையடுத்து தீர்ப்பை தள்ளிவைத்தார் நீதிபதி.
Enforcement Directorate tells the court, "A CM is not above the law." https://t.co/Sdq1l4IXs6
— ANI (@ANI) March 28, 2024
- அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
- 28-ந்தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ந்தேதி கைது செய்தது. அவரை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே கைதை எதிர்த்தும், அமலாக்கத்துறை காவலில் வைத்துள்ளது சட்டவிரோதம் என்றும், உடனடியாக விடுதலை செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறையின் காவல் நாளையுடன் முடியும் நிலையில் இன்றே உத்தரவு பிறப்பிக்க முதல்-மந்திரி கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை விடுத்தது.
அமலாக்கத்துறை தரப்பு கூறும்போது, கெஜ்ரிவாலின் மனுவின் நகல் நேற்றுதான் கிடைத்தது. எனவே விரிவான பதில் அளிக்க 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால நிவாரணம் வழங்க வழக்கை முன் கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
- பிரதமர் மோடி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
- ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
புதுடெல்லி:
ராஜஸ்தானில் கடந்த மாதம் 22-ம் தேதி காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், பிரதமா் மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல. ராகுலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவோ, இதுபோன்ற பேச்சுகளை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தவோ பாராளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது. ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்