என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "demonstrate"
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று நெல்லை சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீத வேலை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு பணி இடங்களை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் ஷிபானா, ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரிக்கை
- ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேரடி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அபுதாஹீர் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இணைச் செயலாளர் அப்துல் நசீர் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் யாசர்கான், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஷேக் முகம்மது நன்றி கூறினார்.
- ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரியபாளையம்:
அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணியினை சத்துணவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இத்திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவு பணியாளர்கள் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், மாவட்டத் தலைவர் சிவா, ஒன்றிய செயலாளர் தினேஷ், ஒன்றிய பொருளாளர் காந்திமதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மதுரை
மதுரை மண்டல டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், ஒரிசாவை போல தமிழகத்திலும் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி, திருமா பாண்டி, நிர்வாகிகள் தேவா அருள்ராஜ், பெரியசாமி, ரவிச்சந்திரன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
- நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழக மக்களை வாட்டி வதைக்கும் வகையில் தி.மு.க. அரசு கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மின்கட்டண உயர்வை அறிவித்துள்ள தி.மு.க. அரசை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
- வருகிற 10-ம் தேதி தபால் துறை ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
நெல்லை:
அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பாளை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை கோட்ட செயலாளர் சண்முக சுந்தரராஜ் விளக்கி பேசினார்.
இதில் நெல்லை மாவட்ட ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி, விஜயராஜா, செல்லதுரை, கண்ணன், கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அஞ்சல் சேவைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி தபால் துறை ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.
- தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற கோரி வலியுறுத்தி கோஷம்
- வாயில்கூட்டம் இன்று நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது
நெல்லை:
அண்ணா தொழிற் சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊழிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நடந்து என்ன என்பதை விளக்கும் வாயில்கூட்டம் இன்று நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
தொடர்ந்து அவர்கள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொன்னுசாமி, மண்டல செயலாளர் சண்முகவேல், பொருளாளர் வேல்பாண்டியன், நிர்வாக பணியாளர் சங்க செயலாளர் செல்வகணேசன், நிர்வாகி நாட்டரசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பகுதி செயலாளர்கள் சக்திகுமார், சிந்துமுருகன், திருத்துசின்னதுரை, காந்தி வெங்கடாசலம், நிர்வாகிகள் பாறையடிமணி, சாகுல்அமீது, நல்லபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்