என் மலர்
நீங்கள் தேடியது "Denmark Shooting"
- டென்மார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது.
- இதில் படுகாயமடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கோபன்ஹேகன்:
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் விமான நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
அந்த வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. வணிக வளாகத்திற்கு வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென தாக்குதல் நடத்தினார். அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர் என்றும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் டென்மார்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டென்மார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது.
- இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கோபன்ஹேகன்:
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் விமான நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், அந்த வணிக வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. வணிக வளாகத்திற்கு வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென தாக்குதல் நடத்தினார். அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.