என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Dental Treatment"
- பல் சிகிச்சை இருக்கை மூலமாக பல் வேர்சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
- சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களை அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவ மனையில் பல் சிகிச்சை மையம் செயல் பட்டு வருகிறது. இங்கு ஏராள மான பொதுமக்கள் வந்து பல் நோய்களுக்கான சிகிச்சைகளை பெற்று வருகிறார்கள்.
பல் சிகிச்சை இருக்கை
இந்நிலையில் பல் சிகிச்சை பிரிவை நவீனப் படுத்தும் வகையில் அதிநவீன உபகரணங் களுடன் கூடிய பல் சிகிச்சை இருக்கை தமிழக அரசு சார்பில் வழங்கப் பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அதிநவீன பல் சிகிச்சை இருக்கை சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த பல் சிகிச்சை இருக்கை மூலமாக பல் வேர்சிகிச்சை, பல் கட்டுதல், பற்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
மேற்கூரை இடிந்து 2 பேர் காயம்
மேலும் தூத்துக்குடி மாதவன்நாயர் காலனி பகுதியில் சந்திரமோகன் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சந்திரமோகன் மற்றும் அவரது மகன் முனீஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களை கேட்டுக் கொண்டார். மேலும் அவர் களுக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கினார்.
தொடர்ந்து மருத்துவ மனையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், பொதுமக்களிடம் மருத்துவ மனை செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செய லாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.