search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Collector"

    • கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.
    • துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.

    இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை கலெக்டர் ஜான்சனிடம், அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் அதிகாரிகள் வழங்கினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
    • மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சான் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதற்கிடையே, காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமாரான வெற்றியை விட படு தோல்வி ஒருவருக்கு அதிக ஊக்கம் அளிக்க்கும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
    • 10 ஆம் வகுப்பு வரை நன்கு படித்து வந்த பிரியால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் உயிரியல் கணித பாடத்தை தேர்வு செய்தார்.

    தேர்வுகளில் தோல்வியடைவதால் இன்றைய தலைமுறை மாணவர்கள் எளிதாக மனம் தளர்ந்து விடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் அதை சவாலாக எடுத்து வாழ்கையின் அடுத்தடுத்த கட்டங்களில் சாதித்துக்காட்டும் மாணவர்களும் இருக்கவே செய்கின்றனர். சுமாரான வெற்றியை விட படு தோல்வி ஒருவருக்கு அதிக ஊக்கம் அளிக்க்கும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

    அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் 11 ஆம் வகுப்பில் ஃபெயிலான பிரியால் யாதவ் என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பெண் பல தடைகளை உடைத்தெறிந்து கடின உழைப்பால் MPPSC தேர்வில் வெற்றி பெற்று தனது 27வது வயதில் துணை ஆட்சியர் பதவியில் அமர்ந்திருப்பது கேட்போரை புல்லரிக்க வைப்பதாக உள்ளது.

     

    கடந்த 2021 இல் நடந்த MPPSC தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதில் 16 வது ரேங் எடுத்து அசத்தியுள்ளார் பிரியால் யாதவ். 10 ஆம் வகுப்பு வரை நன்கு படித்து வந்த பிரியால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் உயிரியல் கணித பாடத்தை தேர்வு செய்தார்.

    பிடிக்காத பாடத்தைப் படிதத்தால் இயற்பியலில் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது துணை கலெக்டராக தேர்வாகியுள்ள பிரியால் யாதவ் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

    முன்னதாக சமீபத்தில் 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர் ஐபிஎஸ் ஆன கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 12த் பெயில் திரைப்படம் பிரியால் யாதவின் வாழக்கையை ஒத்த கதைக்களத்துடன் நகர்வது குறிப்பிடத்தக்கது. 

    • தாசில்தாராக பணியாற்றிய 22 பேருக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
    • பதவி உயர்வு உத்தரவை அரசு செயலாளர் ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் தாசில்தாராக பணியாற்றிய 22 பேருக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தாராக இருந்த ராஜகோபால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன துணை கலெக்டராகவும் (நிலம் எடுப்பு), திருப்பூரில் தாசில்தாராக இருந்த முத்துராமன் சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயலாளராகவும் (குடியிருப்புகள்), திருப்பூரில் தாசில்தாராக இருந்த கிருஷ்ணவேணி கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (நிலம் எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை அரசு செயலாளர் ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.

    ×