என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "detail"
- விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.
- கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் விவரங்கள் கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி ( புதன்கிழமை ) காலை 10 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்க ழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை கூட்டம் நடைபெறும் நாளில் காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின் மனுக்களை வழங்க வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
- நாளை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
- பதிவு செய்ய இயலாதவா்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூா் ஆகியவை சாா்பில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை ) நடைபெற உள்ளது.
இந்த முகாம் நாளை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங் மற்றும் பி.இ. கல்வி தகுதிகளுக்குரிய வேலை நாடுவோருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பை அளிக்கவுள்ளனா்.
இதில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சோ்ப்பும் நடை பெறுகிறது. வெளிநா டுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் மற்றும் சுயத்தொழில் தொடங்கு வதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணை யதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய இயலா தவா்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037, 9499055905, 8110919990 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேளாண் அடுக்கு திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பூதலூர்:
பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களின் பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்குத்திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, சர்க்கரை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளடங்கிய 12 துறைகளில் விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்க செய்யும் வகையில் கிரன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகளுடைய நில உடமை விவரம் சரிபார்க்க ப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை குறித்த ஆவணம், ஆதார் அட்டை நகல் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது உதவி வேளா ண்மை அலுவல ர்கள் அல்லது உதவி தோட்ட க்கலை அலுவலர்க ளை தொடர்பு கொண்டு விவரங்க ளை சரிபார்த்துக் கொள்ளவும் மற்ற விவசாயிக ளுக்கு இதை தெரிவித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- கால்நடை ஆஸ்பத்திரி வெளியில் உள்ள ஷெட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
- அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
வல்லம்:
சென்னை மதுரவாயில் காமாட்சி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் என்பவரின் மகன் வசந்த்சூர்யா (வயது 23). இவர் கால்நடை மருத்துவ படிப்பு படித்து உள்ளார். தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பயிற்சி டாக்டராக பணியில் சேர்ந்தார்.
இதற்காக அவர் கால்நடை மருத்துவமனையின் உள்ளே உள்ள அறையில் தங்கினார். மேலும் அவருடன் இரண்டு பயிற்சி டாக்டர்கள் தங்கி இருந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை வசந்த்சூர்யா கால்நடை ஆஸ்பத்திரி வெளியில் உள்ள ஷெட்டில் உள்ள மேல் இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கள்ளப்பெரும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வசந்த்சூர்யா உடலை மீட்டனர். அவரின் செல்போனை கைப்பற்றினர். ஆனால் செல்போன் லாக் செய்யப்பட்டு இருந்ததால் அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
தொடர்ந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், டாக்டர் வசந்த்சூர்யா மது அருந்தி இருந்ததும், விளையாட்டு வீரர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்த்சூர்யா தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் தாக்கி தூக்கில் தொங்க விட்டனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் லாக்கான செல்போனை செயல்பட வைத்த உடன் பல்வேறு விவரங்கள் கடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்