search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "detention camps"

    • மதுரையில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • 122 பகுதிகளில் தீவிர காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மதுரை

    தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த வாரம் வரை பாதிப்பு எண்ணிக்கை 150-க்கும் குறைவாக இருந்தது. ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு தற்போது 250-ஐ கடந்துள்ளது.

    நேற்று மட்டும் 273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த நடைமுறை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 30 படுக்கைள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அங்கு தற்போது வரை ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை அரசு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் பணிபுரிந்து வருகிறார். அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலமேட்டைச் சேர்ந்த விசாரணை கைதிக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் சார்பில் நேற்று மட்டும் 122 பகுதிகளில் தீவிர காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    அங்கு 4 ஆயிரத்து 220 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. காய்ச்சல் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரையில் கொரோனா பரவல் தொடர்பாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்,தினமும் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் லேசான பாதிப்பு என்றால், வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பாதிப்பு அதிகம் இருந்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை வழங்கி வருகிறோம் என்றனர்.

    மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், மதுரை மாவட்டத்தில் கொரோனாவை எதிர் கொள்ள தயாராக உள்ளோம். இதற்காக போதிய தடுப்பு மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனோ நோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு மட்டும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு டாக்டர் குழுவினர் நேரடியாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.

    ×