என் மலர்
நீங்கள் தேடியது "devotees ecstasy"
- திருவதிகையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது.
- இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி முதல்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.
கடலூர்:
பண்ருட்டி திருவதிகையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலை போல் கிரிவலத்தால் புகழ் பெற்று வரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி முதல்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் சாமி, அம்மனுக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள், தீபாராதனை மற்றும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாட வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது தொடர்ந்து ஸ்தல நாயகர் திரிபுர சம்ஹாரமூர்த்தி மற்றும் திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 7.45 மணி அளவில் ராஜ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். அப்போது கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் திரிபுரசம்ஹாரமூர்த்தியும், திரிபுரசுந்தரியும் எழுந்தரு ளினர்.
பின்னர் தேரில் சிவாச் சாரியார்கள் வேதமந்தி ரங்கள் ஓத, மகாதீபாராத னை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திர ளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள், ஹரகர மகாதேவா, ஓம் நமச்சிவாயம், சிவாய நம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர்.இந்த தேரோட்டத்தில் கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், நகரசபை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கள் எம்.சி. சம்பத், எம்.சி.தாமோதரன், வக்சீல் எம்.சி.தண்டபாணி, உதவி ஆணையாளர் சந்திரன், தாசில்தார் ஆனந்தி, நகராட்சி ஆணையாளர்மகேஷ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, செயல் அலுவலர் மகாதேவி, ராமலிங்கம், வேல்விழி, ரமேஷ்பாபு, ஆய்வாளர்கள் ஸ்ரீதேவி, ஜெயசித்ரா,துணை தாசில் தார் சிவக்குமார், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் ஆகியோர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 8.45 மணிக்கு கோவில் முன்பு இருந்து தொடங்கிய தேரோட்டம், மாடவீதியில் வலம் வந்து மீண்டும் 9.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று இரவு 7 மணியளவில் சரநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள செய்து,திரிபுர சம்ஹார மூர்த்தி திருத்தேரில் ஐதீக முறைப்படி முப்புரம் எரித்த காட்சி நடைபெற உள்ளது.