என் மலர்
நீங்கள் தேடியது "Devotees who started fasting"
- கந்த சஷ்டி விழா தினம் விரதமிருந்து வழிபட்டு வருவதால் நோய் நொடிகள் தீரும், செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டால் கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
திண்டுக்கல்:
தமிழ் கடவுள் முருகனுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமான ஒன்று. அன்றைய தினம் விரதமிருந்து வழிபட்டு வருவதால் நோய் நொடிகள் தீரும், செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டால் கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
திண்டுக்கல் அடுத்த ரெட்டியார் சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி போகர் நகர் பாதாள செம்பு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு நீர் வளத்தை குறிக்கும் வகையில் ஊதா நிறத்தில் முத்துக்கள் மற்றும் கற்கள் பதித்த உடை அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள் பாலித்தார்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், கோவை, ஈரோடு, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சஷ்டியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். 19ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஆதினம் அறிவாதினம் செய்து வருகிறார்.