search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanashree"

    • 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
    • இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர்.

    மும்பை:

    அண்மையில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக ஆடிய சாஹல் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் இருக்கிறார். 

    இந்த நிலையில் சாஹல் வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் மருத்துவரான தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது. பின்னர் அவர் மீதான மீடியா வெளிச்சம் அதிகரிக்க, தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

    இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. தனஸ்ரீயின் நடவடிக்கைகளில் சாஹலுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.


    ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கை லோடிங்" என்று சில மாதங்களுக்கு முன் பதிவிட்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் இருவரும் பின் தொடர்வதை நிறுத்தியதோடு, தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் அழித்து வருகின்றனர்.

    இதனால் சாஹல் - தனஸ்ரீ தம்பதியினர் விவாகரத்து செய்ய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில், சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

    ×